- Advertisement -
உலக கிரிக்கெட்

இங்கிலாந்துக்காக ஜெயிக்கல.. ஸ்காட்லாந்தை மதிக்கிறோம்.. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இது தான் காரணம்.. மார்ஷ் பேட்டி

விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற 35வது லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் 180/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் பேரிங்க்டன் 42*, ப்ரெண்டன் மெக்முலன் 60 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 171 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 1, கேப்டன் மார்ஷ் 8, மேக்ஸ்வெல் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர் இருப்பினும் டிராவிஸ் ஹெட் 68, மார்கஸ் ஸ்டோனிஸ் 59, டிம் டேவிட் 24* ரன்கள் எடுத்து 19.4 ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

இங்கிலாந்துக்காக அல்ல:
அதனால் அதிகபட்சமாக ஷெரிப் 2, மார்க் வாட் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த ஸ்காட்லாந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் காரணமாக நேற்று நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. முன்னதாக தங்களுடைய பரம எதிரியான இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வீட்டுக்கு அனுப்புவதற்கு தேவையான வேலையை இப்போட்டியில் செய்வோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இப்போட்டியில் கத்துக்குட்டியான ஸ்காட்லாந்திடம் தோற்றால் அது அவமானம் என்பதால் அதை செய்யாத ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இங்கிலாந்தை பழிவாங்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல உதவியது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்காக தாங்கள் வெற்றி பெறவில்லை என ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் கூறியுள்ளார். தங்களுக்கு சவாலை கொடுத்ததால் ஸ்காட்லாந்தை வீழ்த்தியதாக தெரிவிக்கும் அவர் சூப்பர 8 சுற்றுக்கு முன்பாக புத்துணர்ச்சியை பெறுவதற்காக வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டோம் என்பதை அறிவோம். எங்களுடைய திட்டத்தில் நிற்க வேண்டும் என்று பேசினோம். நல்ல அணியான ஸ்காட்லாந்து தற்போது நிறைய முன்னேறியுள்ளது. அவர்களை நாங்கள் மதிக்கிறோம். தொடர்ச்சியாக வெல்ல விரும்பும் நாங்கள் தோல்வியை சந்தித்தால் எங்கள் வழியில் தோற்போம்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியால் பாகிஸ்தான் அணி சந்திக்கப்போகும் சிக்கல் – விவரம் இதோ

“எங்களுடைய அணிக்கு சவால் விடுக்கப்படும் போதெல்லாம் அது எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இன்று எங்களுக்கு சவால் விடுக்கப்பட்டது. அதை சமாளித்து வென்றது நல்ல அனுபவமும் கிரிக்கெட்டையும் கொடுத்தது. தற்போது நாங்கள் புத்துணர்ச்சியுடன் துவங்க உள்ளோம். டி20 ஃபார்மட் கடினமானது என்பதால் நீங்கள் அனைத்து நேரமும் கவனத்துடன் இருக்க வேண்டும். (இங்கிலாந்தை பற்றி) இது உள்நாட்டை விட வெளிப்புறமாக இருந்தது. இன்று நாங்கள் எங்களுக்காக வென்றோம். அவ்வளவு தான் முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -