- Advertisement -
ஐ.பி.எல்

இதனால தான் ஐபிஎல் உலகின் பெஸ்ட் லீக்.. 2010 டெக்கான் சார்ஜர்ஸில் ஆரம்பிச்ச கனவு.. ஆட்டநாயகன் மார்ஷ் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் 64வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத்தை சொந்த மண்ணில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 117 (64) ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

அவருடன் ஐடன் மார்க்ரம் 36, பூரான் 56* ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய குஜராத்தை 20 ஓவரில் 202/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய லக்னோ தங்களுடைய 6வது ஆறுதல் வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக சாருக்கான் 57, ரூதர்போர்ட் 38, கேப்டன் கில் 35 ரன்கள் எடுத்தும் 4வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. லக்னோவுக்கு வில்லியம் ஓ’ரோர்க்கே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ஆட்டநாயகன் மார்ஷ்:

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மார்ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சதத்தை அடிக்க வேண்டும் என்ற கனவு முதல் முறையாக 2010ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது துவங்கியதாக மார்ஷ் தெரிவித்துள்ளார். இடையில் சில வருடங்கள் விளையாடாமல் போனதால் தாமதமான ஐபிஎல் சதத்தை ஒரு வழியாக இந்தப் போட்டியில் அடித்தது மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஐபிஎல் உலகிலேயே மிகவும் சிறந்த டி20 லீக் என்று பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் இடையே நான் சில வருடங்கள் விளையாடவில்லை. தற்போது ஒரு வழியாக சதத்தை அடித்துள்ளேன். முதல் முறையாக நான் 2010ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினேன். இது நீண்ட பயணம்”

- Advertisement -

சிறந்த ஐபிஎல்:

“லக்னோ அணியில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. மார்க்ரமுடன் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளேன். ஐபிஎல் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் விளையாட வந்தேன். குஜராத் அணி பவர் பிளேட் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்தனர். பவர் பிளே ஓவரில் நீங்கள் 12 பந்தில் 12 ரன்கள் எடுத்தால் பதற்றமான சூழல் ஏற்படும்”

இதையும் படிங்க: 33 ரன்ஸ்.. நண்பன் திக்வேஷ்’க்காக ஆகாஷ் செய்த அர்ப்பணிப்பு.. டேபிள் டாப்பர் குஜராத்தை சாய்த்த லக்னோ

“அப்போது சில நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களுடைய விஷயங்களை எளிதாக மாற்றியது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஐபிஎல் தொடரில் நல்ல போட்டி மிகுந்தது. அதில் சில போட்டிகளில் வெற்றியை நெருங்கி சென்றும் தவற விட்டதால் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினோம். ஐபிஎல் தொடரில் எந்த அணியும் தங்களுடைய நாளில் எந்த அணியையும் தோற்கடிக்கும். அதனாலேயே ஐபிஎல் உலகின் சிறந்த போட்டியாக இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -