இந்தியாவுக்காக அப்போரோச்சை மாத்த மாட்டோம்.. அவர் சவாலைக் கொடுத்தாலும் அடி உறுதி.. கேப்டன் மார்ஷ்

Mitchell Marsh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 29ஆம் தேதி துவங்கிறது. அத்தொடரில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

2025 ஆசியக் கோப்பையை வென்றாலும் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது உண்மையாகவே இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் கடந்த சில டி20 உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா அசத்தவில்லை என்று கேப்டன் மிட்சேல் மார்ஷ் கூறியுள்ளார். எனவே தங்களுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றி எதிரணிகளை அடித்து நொறுக்கும் அணுகுமுறையை கையிலெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அப்ரோச் மாறாது:

அந்த சூழ்நிலையில் நம்பர் ஒன் அணி என்பதற்காக இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய அணுகுமுறையை மாற்ற மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இத்தொடரில் இந்தியாவை அடித்து நொறுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் அபிஷேக் சர்மா தங்களுடைய பவுலர்களுக்கு சவாலைக் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். இது பற்றி மார்ஷ் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு கடந்த 2 உலகக் கோப்பைகள் நன்றாக செல்லவில்லை”

“அதனால் உலகக் கோப்பையை வெல்வதற்கு எந்த விஷயத்தில் எங்கள் அணிக்கு நாங்களே சவாலைக் கொடுக்கலாம் என்று பேசினோம். அதன் முடிவில் பேட்டிங் துறையில் நாங்கள் இன்னும் அதிக ஆக்ரோசத்துடன் விளையாட முடிவெடுத்துள்ளோம். சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாகவே நிறைய அணிகள் அந்த அணுகுமுறையை டி20 கிரிக்கெட்டில் பின்பற்றுவது இயற்கையாக மாறியுள்ளது”

- Advertisement -

இந்தியாவை அடிப்போம்:

“அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் நாங்கள் குறிப்பிட்ட வழியில் விளையாட உள்ளோம். அந்த வழியில் அனைத்து நேரமும் வெல்ல முடியாது. அவ்வப்போது தோல்விகளை சந்திப்போம். ஆனால் அந்த வழி எங்கள் வெற்றிக்கு நல்ல வழியாகும். அதை நாங்கள் கட்டமைப்போம். சிறந்த அணியான இந்தியாவின் மேலே நாங்கள் மரியாதை வைத்துள்ளோம்”

இதையும் படிங்க: பதவி கிடைச்சதும் நான் உழைக்கலன்னு நினைக்காதீங்க.. உழைப்பதால் ரன்ஸ் தானா வரும்.. சூரியகுமார் பேட்டி

“2 நல்ல அணிகள் மோதும் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். உலகக் கோப்பைக்காக இந்திய அணி தயாராகும் முறைகள் பற்றி என்னால் பேச முடியாது. அபிஷேக் அவரது அணிக்கான அடித்தளத்தை அமைக்கக்கூடியவர். சன்ரைசர்ஸ் ஐபிஎல் அணிக்காக அவர் சில வருடங்களாக அசத்தி வருகிறார். எனவே அவர் எங்களுக்கு நல்ல சவாாலைக் கொடுப்பார். பொதுவாகவே நீங்கள் உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள். அவர் அது போன்ற ஒரு வீரர்” என்று கூறினார்.

Advertisement