ஜஸ்ப்ரித் பும்ரா 4 வயது மாப்பிளையாக வந்து வீட்டில் தொல்லை பன்றாரு.. ஆஸி விருதில் மார்ஷ் கலகலப்பு

Mitchell Marsh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தன்னுடைய திறமையால் தற்சமயத்தில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்தத் தொடரில் தனி ஒருவனாக வெற்றிக்குப் போராடிய அவர் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து பல சாதனைகளை புரிந்தார்.

குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய மற்றும் ஆசிய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பவுலர் என்ற சாதனையையும் பும்ரா படைத்தார். 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.

- Advertisement -

நைட்மேர் பும்ரா:

அந்தளவுக்கு துல்லியமாக பவுலிங் செய்த அவரை எதிர்கொள்ள முடியாமல் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட அனைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் திண்டாடினார்கள். அதற்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் விதிவிலக்காகவில்லை. ஏனெனில் பும்ராவிடம் தடுமாறிய அவர் அந்தத் தொடரில் 4 போட்டிகளில் வெறும் 73 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்நிலையில் கடந்த 2024 சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் வீராங்கனைகளுக்கு அந்நாட்டு வாரியம் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தம்முடைய 4 வயதாகும் சகோதரியின் மகன் (மாப்பிள்ளை) பும்ராவை பார்த்து அவருடைய ஆக்சனில் தமக்கு எதிராக வீட்டில் பவுலிங் செய்வதாக மார்ஷ் கூறினார்.

- Advertisement -

4 வயது மாப்பிளையாக:

அந்த வகையில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை முடிந்தும் பும்ராவின் தொல்லை தமக்கு ஓயவில்லை என்று அவர் சொன்னது அரங்கில் இருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய சிறிய மாப்பிள்ளை 4 வயது மட்டுமே நிரம்பியவர். மற்றொரு நாளில் அவருடன் நான் வீட்டில் கிரிக்கெட் விளையாடினேன்”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு சாதகமா ஐசிசி ஏன் இந்த ஊழல் முடிவை எடுத்தாங்க? கிறிஸ் ப்ராட் முகத்தில் கரியை பூசிய ரசிகர்

“அப்போது அவர் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஆக்சனுடன் வந்து எனக்கு எதிராக பவுலிங் செய்தார். அந்த வகையில் பும்ராவின் நைட்மேர் எனக்கு தொடர்கிறது” எனக் கூறினார். அதைக் கேட்டு ஜாம்பவான் ஆலன் பார்டர் உள்ளிட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தார்கள். மொத்தத்தில் ஆஸ்திரேலியர்களின் மனதில் மகத்தான பவுலராக பும்ரா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement