ஆர்.சி.பி அணி வீரரான இவரே வேர்ல்டு பெஸ்ட் பேட்ஸ்மேன் – மிட்சல் ஜான்சன் புகழாரம்

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மிட்செல் ஜான்சன். அறிமுகமான காலத்திலிருந்து ஓய்வு பெறும் வரை அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த இவர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் மேல் வீசக்கூடிய ஒரு திறமை வாய்ந்தவர். மேலும் நல்ல வேரியேஷனில் அவர் பந்து வீசுவதால் ஒரே வேகத்தில் லைன் அண்ட் லெந்த் மாறாமல் பந்துகளை வீசுவார்.

Johnson 1

- Advertisement -

மேலும் ஒரே ஓவரில் 6 வேரியேஷனில் பந்துகளை வீசும் இவர் தனது வேகம் மற்றும் பவுன்சர்களின் மூலம் சர்வதேச பேட்ஸ்மேன்கள் பலரை மிரட்டி உள்ளார். அதிலும் குறிப்பாக 2013-14 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் நிலைகுலைய வைத்து தனது வேகத்தின் மூலம் கட்டிப்போட்ட ஜான்சன் அந்த தொடரில் மட்டும் 37 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஜான்சன் தற்போது தன்னைப் பொறுத்த மட்டில் தான் பந்துவீசி அதற்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்த வீரர் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பந்து வீசி அதனை திறமையாக பயமின்றி எதிர்த்து விளையாடிய வீரர் என்றால் அது டிவில்லியர்ஸ் தான் என்று கூறியுள்ளார். இப்போதைய இளம் வீரர்கள் பலரும் சிறப்பான ஷாட்களை ஆடுகிறார்கள்.

ABD

மேலும் வித்தியாசமான பல ஷாட்டுகளை தற்போது ஆடி வந்தாலும் டிவியில் தான் இதற்கெல்லாம் முன்னோடி அவரே எல்லாவிதமான ஷாட்டுகளில் ஆடுவதில் வல்லவர். களத்தில் மிகவும் அமைதியாகவே இருக்கும் அவரின் ஆட்டம் மட்டும் எப்போதும் அதிரடியாக இருக்கும். பெங்களூர் அணிக்காக அவர் ஆடிய ஷாட்டுகளை எல்லாம் பார்க்கும் போதே உங்களுக்கு அது தெரியும் என்றும் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் மைதானத்தின் எந்த ஒரு பகுதிக்கும் சிக்ஸர்களை அடிப்பதில் இவர் வல்லவர். அதனால்தான் இவர் ரசிகர்களால் மிஸ்டரி 360 என்று அழைக்கப்படுகிறார். தன் சொந்த நாட்டிற்கு அல்லாமல் உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் டிவிலியர்ஸ் வைத்திருக்கிறார். இதுவரை தென்ஆப்பிரிக்கா அணிக்காக 114டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8765 ரன்களையும், 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டிவிலியர்ஸ் 9577 ரன்களை குவித்துள்ளார். மேலும் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1672 ரன்களை குவித்துள்ளார்.

ABD-1

2018 ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்த டிவில்லியர்ஸ் தொடர்ந்து வெளிநாட்டு தொடர்களில் விளையாடிவருகிறார். ஆனால் தற்போது இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் அவரை விளையாட வைக்க தென்னாப்பிரிக்கா வாரியம் ஆர்வம் காட்டுகிறது மேலும் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் எப்படியாக இருந்தாலும் அவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார் இந்த ஆண்டும் அவர் பெங்களூரு அணிக்காக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement