எனக்கு உங்கள நெனச்சா சிரிப்பா வருது. உங்களால ஒன்னும் பண்ண முடியாது – கோலியை சீண்டிய ஜான்சன்

Johnson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து இழந்தது. மேலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஒரு அணி ஒரு தொடர் முழுவதும் இவ்வளவு மோசமாக விளையாடி படுதோல்வி அடைந்ததால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Kohli

- Advertisement -

மேலும் இந்த தொடர் முழுவதும் கோலி மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆட்டம் இழந்து வெளியேறியபோது அவரது ஆக்ரோஷத்தை கடுமையாக வெளிப்படுத்தினார்.

மேலும் ரசிகர்களையும் வாயை மூடும் படி சைகை செய்து கெட்ட வார்த்தையில் திட்டியதுபோல சில விடயங்களை செய்தார். கோலியின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் தோல்வியின் விளிம்பில் இருந்த கோலி ரசிகர்களை நோக்கி அவர்கள் இந்தியா வரட்டும் அப்போது நாங்க யாரு யாரென்று காட்டுகிறோம் என்பது போன்று கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

Kohli

இந்நிலையில் இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் இது எனக்கு சிரிப்பை வர வைக்கிறது என்று வயலின் உடன் சோக மியூசிக் ஒன்றை பின்னணியில் வைத்து ஜான்சன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இரண்டாவது போட்டிக்கு பின் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது மைதானத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் கேள்வியைக் கேட்க வேண்டாம். அது குறித்து நான் ஏற்கனவே அம்பயரிடம் பேசி விட்டேன், ஒரு பிரச்சினையுமில்லை. கேள்விகளை சரியாக கேளுங்கள் அதையும் மீறி சர்ச்சையை கிளப்ப விரும்பினால் அதற்கான நேரமும் இடமும் இது கிடையாது என்று பேட்டி அளித்து இருந்தார். இதுபோன்ற கோலியின் நடவடிக்கைகளை இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement