இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் தவான் 31 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷம்சி வீசிய 12 ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் ஒன்றை அடித்த தவான் அதற்கு அடுத்த பந்திலேயே பவுண்டரி லைனில் மில்லரின் அற்புதமான காட்சி மூலம் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தவான் அந்த ஷாட்டை தூக்கி அடிக்காமல் வேகமாக அடித்தார். அந்த பந்து சிக்ஸ் லைனை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும்போது ஓடிவந்த மில்லர் ஒற்றைக் கையால் அந்த கேட்சை பிடித்து அசத்தினார். அவரின் இந்த அசத்தலான கேட்ச் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ அதிக அளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.