அவரும் சாதாரண மனிதர் தானே அவர் அவுட் ஆவதில் என்ன தப்பு இருக்கு – முன்னணி வீரருக்கு சப்போர்ட் செய்த ஹஸ்ஸி

Hussey
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த நவ்.17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன்கள் பர்ன்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

ashwin 1

இவர்களைத் தொடர்ந்து கிரிஸ் கிரீன், டிம் பெய்ன் ஆகியோர் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா (4) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்(3) ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்து 195 ரன்களை குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை பெற்று 131 ரன்கள் முன்னிலை வகித்தனர்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய வீரர்கள் திணற வைத்தனர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “ எங்களின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் எடுக்க இந்திய வீரர்கள் ஒரு யுக்தியை பயன்படுத்தி உள்ளனர்.

smith

முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்சிலும் ஸ்மித் ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்தார். தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 8 ரன்கள் மட்டுமே பெற்று வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் எப்பொழுதும் பந்தை நோக்கி சென்று விளையாடுவார். இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆப் சைடு வைடு போன்று பந்து வீசி வருகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல் ஃபீல்டிங் செட் செய்தும் வருகின்றனர். இதன் மூலம் ஸ்டீல் ஸ்மித் தனது விக்கெட்டை எளிதில் இழந்து விடுகிறார். ஒரு சில நேரத்தில் எல்பிடபிள்யூ விக்கெட்டு எடுக்கும் வகையில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசி வந்தனர். எனவே தற்போது இந்திய பந்துவீச்சாளர்கள் புது யுக்தியை பயன்படுத்தி விக்கெட்களை எளிதியில் வீழ்த்தி வருகின்றனர் என்று மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

Advertisement