இந்திய அணியிடம் இருந்து இந்த விடயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் – இலங்கை பயிற்சியாளர் பேட்டி

Mickey

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை முன்னிலை வகிக்கிறது.

toss

இந்நிலையில் தொடரின் முடிவின் முடிவைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி எளிதாக இலங்கை அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டி முடிந்து இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் இலங்கை அணி மேலும் 20 முதல் 25 ரன்கள் அடித்திருந்தால் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்திருக்கலாம். ஆனால் பந்துகளை அடிக்காமல் விட்டதும் ரன்களை குவிக்காமல் விட்டதுமே தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் இளம் வீரர்களை ஊக்குவித்து நெருக்கடி நேரத்தில் எவ்வாறு விளையாட வைக்க வேண்டும் என்பதை இந்திய அணியிடம் இருந்து சர்வதேச அணிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

Saini-1

கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தற்போது இந்திய அணி நல்ல பார்மில் உள்ளதாகவும், டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு இணையாக தற்போது இந்திய அணி உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்தர் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை எதிர்கொள்ள புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -