தோனி இருந்த வரைக்கும் டாப்ல இருந்தாரு. இனிமே அவரு வண்டி ஓடாது – மைக்கல் வாகன் ஓபன்டாக்

Vaughan

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது குல்தீப் யாதவ் தான் என்கிற கணக்கில் மிக அபாரமாக பந்து வீசி வந்த குல்தீப் யாதவ், சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் இன்று வரை மிகப்பெரிய அளவில் சொதப்பி அனைவரது கேள்விக்கும் ஆளாகியுள்ளார்..சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குல்திப் யாதவ் சரியாக பந்துவீச காரணத்தினால் மூன்றாவது போட்டியில் உட்கார வைக்கப்பட்டார்.. அதுமட்டுமின்றி இந்த ஐ.பி.எல் தொடரிலும் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kuldeep

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் போட்டியில் 9 ஓவர்கள் வீசிய குல்தீப் 68 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தார். அதேபோல இரண்டாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 84 ரன்கள் குடுத்து மறுபடியும் விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் பல்வேறு வகையில் குல்தீப் யாதவை ரசிகர்கள் கேள்வி பொருளாக்கி வரும் நிலையில் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகனும் குல்தீப் யாதவை பற்றி சில வார்த்தைகள் கூறியுள்ளார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி தலைமையில் குல்தீப் யாதவ் நன்றாக விளையாடி வந்ததாக இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். தோனி இருந்த வரையில் அவரது ஆலோசனைகளை சரியாக பெற்று சரியான விதத்தில் பந்தை சுழற்றி எதிரணி பேட்ஸ்மேன்களை குல்தீப் யாதவ் திணறடித்து வந்தார்.இப்பொழுது தோனி இல்லாத வேளையில் எப்படி பந்து வீச வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை.

kuldeep1

ஒரு இடது கை பந்து வீச்சாளர் பந்தை அவ்வப்போது வேகமாகவும் , வேகம் அல்லாமலும் லைன் மாற்றி பேட்ஸ்மேன் ஆடும் இடத்துக்கு ஏற்ப பந்தை சுழற்றி கொண்டு வர வேண்டும்.ஆனால் குல்தீப் யாதவ் சமீப காலங்களாக ஒரே மாதிரியே பந்து வீசி வருகிறார். புதிதாக எந்த விதமான பந்துகளும் அவரிடத்தில் இதுவரை நான் பார்த்ததில்லை. இது பவுலரிடம் நிச்சயம் இருக்கக் கூடாத விஷயம் ஆகும். ‘குல்தீப் யாதவை பார்க்கையில், தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வார் என எனக்குத் தோன்றவில்லை. அவர் ஒரே இடத்தில் தான் தற்போது வரை இருக்கிறார். என்னை பொறுத்தவரை அவரது கேரியர் கஷ்டம் தான்.

- Advertisement -

kuldeep 1

மேலும் அவர் இனி வரும் காலங்களில் தன்னை புதுப்பித்துக் கொண்டு சிறப்பாக ஆடினால் மட்டுமே அடுத்த இடத்தை வாய்ப்புகளை பெற முடியும் என்று கூறி முடித்தார். இந்திய அணியில் அடுத்தடுத்து இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் இனி குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் மறுபடியும் இடம் கிடைக்குமா கிடைக்காதா என காலம் தான் பதில் கூற வேண்டும் என இந்திய ரசிகர்கள் சிலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement