ஆஸ்திரேலிய அணிக்கு குடைச்சல் கொடுக்கும் தற்போதைய அணி என்றால் அது இந்த அணி மட்டும்தான் – வாகன் பேட்டி

Vaughan

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வான் அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு இந்திய ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட செம திட்டு வாங்குவார். இந்நிலையில் அவர் தற்போது ஐசிசி தரவரிசைப் பட்டியலை மோசமாக விமர்சித்துள்ளார்.

Ind

அதன்படி சர்வதேச அளவில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி (120 புள்ளிகளுடன்) முதலிடத்திலும், அதற்கடுத்து நியூசிலாந்து அணி (112 புள்ளிகளுடன்) 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்து முறையே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இருக்கின்றன. இந்நிலையில் ஐசிசியின் இந்த ரேங்க்கிங் முறையை குறித்து வான் குறிப்பிட்டதாவது : ஐசிசி ரேங்க்கிங் ஒரு குப்பை போன்றது. இது என்னுடைய நேர்மையான கருத்து.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நியூசிலாந்து ஒரு சில தொடர்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது அதனால் இரண்டாவது இடத்தில் இருப்பது என்னை பொறுத்தவரை சரியான இடமல்ல. அதேபோன்று இங்கிலாந்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான அணிகள் என்றால் அது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மட்டும்தான். ஏனெனில் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து நெருக்கடி கொடுக்கும் ஒரே அணி என்றால் அது இந்திய அணி மட்டும்தான்.

Ind-1

ஆனால் அப்போது ஸ்மித், வார்னர் போன்ற வீரர்கள் அந்த தொடரில் விளையாவில்லை. இருப்பினும் தற்போதைய இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்துமே பலம் பொருந்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி கொஞ்சம் கூட குறைந்த அணியாக இல்லை. அவர்களுக்கு நிச்சயம் இந்திய அணி மட்டுமே மிகப்பெரிய நெருக்கடி தருவார்கள் மேலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி திறமையும் இந்திய அணியிடம் மட்டுமே உள்ளது என்று நான் கருதுகிறேன் என்றும் வான் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -