IPL 2023 : வண்டி 8 பால் தான் ஓடுமா? நட்சத்திர பெங்களூரு வீரரை விளாசும் மைக்கேல் வாகன் – காரணம் என்ன

Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. குறிப்பாக கடைசி 2 போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தலைமையில் களமிறங்கிய அந்த அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வெற்றி பாதையில் நடந்து வருகிறது. இருப்பினும் அந்த அணியின் மிடில் ஆர்டரில் குறிப்பாக கடந்த வருடம் மிகச் சிறந்த பினிஷராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் இந்த வருடம் சுமாராக செயல்பட்டு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

ஆரம்ப காலம் முதலே அழுத்தமான போட்டிகளில் தடுமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்ததாலும் தோனி இருந்தாலும் இந்திய அணியில் நிலையான வாய்ப்புகளை பெறாத அவர் 2019 உலக கோப்பைக்கு பின் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறியதால் வர்ணனையாளராக உருவெடுத்தார். அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் கடந்த சீசனில் யாருமே எதிர்பாராத வகையில் பெங்களூரு அணியில் 330 ரன்களை 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி மிகச் சிறந்த பினிசராக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து பிளே ஆப் சுற்று செல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் 3 வருடங்கள் கழித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் இருதரப்பு தொடர்களில் அசத்திய போதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மீண்டும் மொத்தமாக சொதப்பி முன்னேறாத செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

வண்டி ஓடாதா:
அதனால் அதிரடியாக கழற்றி விடப்பட்ட அவருடைய இந்திய கேரியர் முடிந்ததாக பார்க்கப்படும் நிலையில் இந்த சீசனில் 0 (3), 9 (8), 1 (1), 0 (1), 28 (14), 7 (5) என சொற்ப ரன்களில் அவுட்டாகி சுமாராகவே செயல்பட்டு வருகிறார். அதை விட நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி கோல்டன் டக் அவுட்டானதும் டு பிளேஸிஸ் 62 ரன்களும் மேக்ஸ்வெல் 77 ரன்களும் விளாசி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர். ஆனால் அப்போது களமிறங்கிய அவர் 16 (13) ரன்களில் அவுட்டாகி அதிரடியை காட்டத் தவறியதால் 200 ரன்களை எடுப்பதற்கு பிரகாசமான வாய்ப்பை பெற்றிருந்த பெங்களூரு இறுதியில் 189/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதாவது கடைசி சில பந்துகளில் மட்டும் களமிறங்கினால் அதிரடியாக விளையாடும் தினேஷ் கார்த்திக் சற்று முன்கூட்டியே களமிறங்கி நங்கூரமாக செயல்பட்டு கடைசியில் அதிரடி காட்ட வேண்டிய சூழ்நிலை வந்தால் சொதப்பி விடுகிறார். இந்நிலையில் கடைசி 8 பந்தில் மட்டும் தான் சிறப்பாக விளையாடுவதற்கு பெங்களூரு அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது போல் தினேஷ் கார்த்திக் விளையாடுவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சஹால் ராஜஸ்தான் அணிக்கு சென்றதிலிருந்து பெங்களூரு தங்களுக்கு சரியான வீரர்களை ஏலத்தில் வாங்குவதில் தடுமாறி வருகிறது. குறிப்பாக பேட்டிங்கில் அவர்களது டாப் ஆர்டரில் இருக்கும் 3 பேட்ஸ்மேன் அதிக வலுவாக உள்ளனர். ஆனால் அவர்களைத் தொடர்ந்து வரும் தினேஷ் கார்த்திக் பெரும்பாலும் 8 பந்துகள் மட்டுமே விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் பேட்டிங் செய்கிறார். என்னை பொறுத்த வரை அவர்கள் சஹாலை தக்க வைத்து ஹசரங்காவை வாங்கிய பணத்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விளையாடும் 5 அல்லது 6வது இடத்தில் விளையாடுவதற்கு அதிரடியான வீரர்களை வாங்கியிருக்கலாம்”

இதையும் படிங்க:வீடியோ : நாயகன் சச்சினுக்கு தலைகீழாக நின்று 50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன சேவாக் – கலகலப்பான காரணம் இதோ

“டி20 கிரிக்கெட்டில் 5, 6, 7 ஆகிய பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான இடங்களாகும். டி20 கிரிக்கெட்டில் 1, 2, 3 ஆகிய இடங்களில் வெற்றிகரமாக செயல்படுபவர்களை விட 5, 6, 7 ஆகிய இடங்களில் வெற்றிகரமாக செயல்படுபவர்கள் மிகவும் குறைவாகும். எனவே பெங்களூரு அணிக்கு ஜிதேஷ் சர்மா அல்லது சிம்ரோன் ஹெட்மயர், பூரான் போல முதல் பந்திலுருந்தே அதிரடியாக விளையாடும் ஒருவர் தேவை” என்று கூறினார். அதாவது 8 பந்துக்கு மேலே வண்டி ஓடாது என்பது போல் செயல்படும் தினேஷ் கார்த்திக்கு பதிலாக அடுத்த வருடம் பெங்களூரு வேறு வீரர்களை வாங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement