இந்திய அணியின் இளம் வீரரான இவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்துவார் – வாகன் கணிப்பு

Vaughan
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது. இதன் பின் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு முறை வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முதல் கபா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே டெஸ்ட் தொடரை கைபற்றும் என்பதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட விருத்திமான் சாஹாவிற்கும் பதிலாக 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெற்ற விளையாடினார்.

விருத்திமான் சாஹாவை விட ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவதால் அணியில் இடம்பெற்றார். ஆனால் ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் கீப்பிங்கில் புகோவ்ஸ்கியின் இரண்டு கேட்ச்களை கோட்டை விட்டார். விக்கெட் கீப்பிங்கில் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரிஷப் பண்ட்டை அணியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று பல விமர்சனங்கள் வந்தது.

Pant

ஆனால் பண்ட் மூன்றாவது போட்டியின் இண்டாவது இன்னிஸ்சில் 97 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தார். கீப்பிங்கில் சொதப்பி இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக பண்ட்டை அனைவரும் பாராட்டி வந்தனர். அந்தவகையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன் இந்திய அணி குறித்தும் ரிஷப் பண்ட் குறித்தும் ட்விட் செய்துள்ளார். :

இதில் ” கடந்த மூன்றுமே சிறப்பான டெஸ்ட் போட்டிகள். இந்திய அணி கடந்த இரண்டு டெஸ்டில் சிறப்பாக அதிரடியாக விளையாடி வந்தனர். பார்க்க இனிமையாக இருந்தது. அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டார். இவர் கண்டிப்பாக 3 வடிவ கிரிக்கெட்டிலும் முக்கிய வீரராக மாறுவார்” என்று மைக்கேல் வாகன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Advertisement