இப்போவும் சொல்றேன் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஏன் தெரியுமா ? – மைக்கல் வாகன் விளக்கம்

Vaughan
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு எந்த ஒரு பயிற்சி போட்டியும் இல்லாததால், இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய வீரர்கள் தங்களுக்குள்ளாகவே இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் ஒரு அணிக்கு விராட் கோஹ்லியும் மற்றொரு அணிக்கு கேஎல் ராகுலும் கேப்டன்களாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் இந்த பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

INDvsNZ

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் அதிரடியாக ஆடி சதமடித்ததோடு மட்டுமல்லாமல், நாட் அவுட் பேட்ஸ்மேனாகவும் வெளியேறி இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரான சுப்மன் கில் மற்றும் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தும் தங்களது திறமையை நிரூபித்து இருக்கின்றனர். இந்திய வீரர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயிற்சிப் போட்டியில் நடந்த சம்பவங்களை வீடியோவாக பிசிசிஐ தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றது.

- Advertisement -

இந்த வீடியோக்களைக் கண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கும் இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாஹன். தனியார் இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

IND

இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சிப் போட்டியில் நன்றாகத்தான் விளையாடுகிறார்கள். ஆனால் அதே போல அவர்களால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முடியாது. இப்போதும் நியூசிலாந்து அணிக்கு தான் இந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பது அவர்களுக்கு மனரீதியாக அதிக பலத்தை கொடுத்திருக்கிறது எனவே இந்த உத்வேகத்தை அவர்கள் இந்திய அணிக்கெதிரான இந்த இறுதிப்போட்டியில் தொடர்வார்கள் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

Williamson

வருகிற 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கும் நியூசிலந்து அணி, இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. அதன்படி அந்த தொடரின் முதல் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது போட்டியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி, டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement