சமீபகாலத்தில் கிரிக்கெட்டின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர் விராட் கோலி. இவர் பேட்டிங்கில் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம். அதிகமாக சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த அனைத்து சாதனைகளையும் தனியாளாக தகர்த்துக் கொண்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகள் ஆடினால் அவரது அதிகபட்ச சாதனைகள் பலவற்றை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக போட்டியில் கூட கோலி 23 ரன்கள் அடித்தபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் விரைவாக 12000 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் இவரை பார்த்து தான் சமீபகால கிரிக்கெட் வீரர்களும், இளம் கிரிக்கெட் வீரர்களும் உருவாகி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் அவரது வழக்கமான ஆட்டத்தை அவர் ஆடவில்லை தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இரண்டு முறை சதத்தை தவறவிட்டார். ஒருநாள் தொடர் முடிவடைந்தவுடன் சில நாட்களில் டி20 தொடரும் துவங்கிவிடும். டி20 தொடர் முடிவடைந்தவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி விட்டு இந்தியாவிற்கு திரும்பி விடுவார் விராட் கோலி.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் கூறுகையில் “விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி மூன்று போட்டியில் ஆட மாட்டார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய மோசமான செய்தி. இதன் காரணமாக இந்திய அணி வெற்றி பெறுவது மிக மிக கடினம். டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மகத்தான வீரர் கோலி தான் அவர் அணியில் இல்லை என்றால் ரன் குவிப்பிலும் நிச்சயம் மாற்றம் இருக்கும்.
எனது மகன் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன். தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டால் கூட விராட் கோலியின் ஆட்டத்தை பார்ப்பான். அதே நேரத்தில் தூங்காமல் பல நாட்களாக உட்கார்ந்து விராட் கோலியின் வீடியோக்களை பார்த்து இருக்கிறான். விராட் தனது விக்கெட்டை இழந்து விட்டால் உடனடியாக எழுந்து சென்று விடுவான். அந்த அளவிற்கு அவரது தீவிர ரசிகனாக இருக்கிறான்” என்று தெரிவித்திருக்கிறார் மைக்கேல் வாகன்.
எப்பொழுதும் இந்திய அணி குறித்தும், இந்திய வீரர்கள் குறித்தும் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வான் இம்முறை கோலியை புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிலாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.