ஆஸி அணிக்கெதிரான தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட ஜெயிக்காது – இந்திய அணியை சீண்டிய இங்கிலாந்து வீரர்

indvsaus
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி கொண்டிருக்கிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடர் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று 27ஆம் தேதி இதன் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDvsAUS Toss

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த இந்திய ஆஸ்திரேலிய தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில் : கடந்த 9 மாதங்களாக இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இதன் காரணமாக திடீரென்று ஒரு அணியாக அவர்கள் ஆடும் போது சிறந்த அணியாக இருக்க வாய்ப்பில்லை.

பந்துவீச்சு மிக மோசமாக இருக்கிறது. அதிக ரன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வழக்கமான பீல்டிங் இல்லை. அதிரடியாக விளையாடுகிறார்கள், ஆனால் பேட்டிங்கிலும் பெரிதாக அவர்களால் சாதிக்க முடியவில்லை.. ஐபிஎல் போட்டிகளில் விளையாடி விட்டு மீண்டும் இந்திய அணியில் ஒன்றாக சேர்ந்து செயல்பட முடியவில்லை.

Vaughan

சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி பழைய பள்ளிக்கூடத்தை போல் இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டி20 ஒருநாள் போட்டி என அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி மொத்தமாக தோற்றுவிடும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த தொடரில் ஒரு தொடரை கூட இந்திய அணி கைப்பற்றமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த கருதினால் இந்திய ரசிகர்கள் அவரின் மீது கடும் எதிர்ப்பினை இணையத்தில் வாயிலாக காண்பித்து வருகின்றனர்.

ind-1

இந்நிலையில் முதல் போட்டியில் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6வது பந்துவீச்சாளர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி பேசியிருந்தார் ஒரு பார்ட் டைம் பந்துவீச்சாளர் வேண்டும் என்பது குறித்து பேசியிருந்தார்.

Advertisement