ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பின்னரும் இந்திய அணியை விமர்சித்த மைக்கல் வாகன் – ரசிகர்கள் கொதிப்பு

Vaughan
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக பரிதாப தோல்வி அடைந்தது. இதன் பிறகு தற்போது நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய சில மாறுதல்களுடன் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அழுத்தத்துடன் கொண்டு சென்றதால் இந்திய அணிக்கு 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்கு கிடைத்தது.

Gill

- Advertisement -

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு தனது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி குறித்து ரகானேவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்திய அணியின் கடுமையான முயற்சி தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறப்பட்டுகிறது.

இந்திய அணியின் வெற்றி குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்திய அணியை முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை இழந்த இந்திய அணி இனிமேல் மீண்டு வர முடியாது. இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை மட்டும் பெறும் என்று மைக்கேல் வாகன் கூறியிருந்தார்.

Rahane-3

இதற்கு பதிலடி கொடுத்தவாறு இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின்பும் அடங்காத மைக்கேல் வாகன் மீண்டும் தனது ட்விட்டரில் ட்விட் செய்து இந்திய அணியை வம்பிழுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற மெல்போர்ன் மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது. இதனால் இந்திய அணி சுலபமாக தனது வெற்றியை பெற்றது.

ஒருவேளை சிட்னியில் இருந்து 3வது டெஸ்ட் போட்டியை மெல்போர்னிற்கு மாற்றினால் இந்திய இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணி கம்பேஃக் கொடுத்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும்” என்று பதிவிட்டுள்ளார் மைக்கேல் வாகன். இந்தப்பதிவு இந்திய ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement