இந்த பிரச்சனை குறித்து நிச்சயம் ஐ.சி.சி.யிடம் கேள்வி எழுப்புவோம் – இந்திய அணியை வம்பிற்கு இழுத்த வாகன்

Vaughan
- Advertisement -

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி உலக கோப்பை உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.

ind

- Advertisement -

இந்நிலையில் இந்த மைதானம் முழுவதுமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டது என்றும் அது இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக பல வீரர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த மைதானம் தயாரிப்பு குறித்து “டெய்லி டெலிகிராப்” எனும் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கூறுகையில் :

ஐசிசி அமைப்பிற்கு இந்தியா போன்ற பலமான நாடுகளை கேள்வி கேட்க பல் இல்லாமல் இருக்கிறது. இந்தியா எப்படிப்பட்ட பிச்சை தயார் செய்தாலும் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். இது கிரிக்கெட்டின் தரத்தை கிடைக்கிறது ஆனால் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை, அதனை செய்யவும் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

vaughan

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்தியா தனக்கு சாதகமான பிச்சை தயாரிக்கிறது, இதன் காரணமாக போட்டி மோசமான நிலைக்கு செல்கிறது. இதனால் வீரர்கள் சரியாக விட முடியவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்தியா இந்த போட்டியை மிக நெருக்கத்தில் வென்று இருக்கின்றனர். என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் வெற்றியாளர் என்பது யாரும் கிடையாது என்று கூறினார்.

pant

அது மட்டுமின்றி இந்தியா திறமையை வெளிப்படுத்தியது என்பது மறுக்க முடியாது. ஆனால் இங்கிலாந்து அணியை விட அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை போன்ற முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து இதுபோன்ற மோசமான தயாரிக்கப்படும் பிட்ச்கள் குறித்து கேள்வி எழுப்புவோம் என்றும் அவர் பொங்கி எழுந்து இந்திய அணியை சீண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement