
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஐசிசி-யின் 10-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் டி20 உலககோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் இந்த கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. அதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
அதேவேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது அணியை அறிவித்த வேளையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு வந்து தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடர் குறித்தான பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் குறித்த கணிப்பினை தனது சமூக வலைதள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் : இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தான் 2026 டி20 உலககோப்பை தொடருக்கான அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்று அவர் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாது என்பதை மறைமுகமாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே 3 துறையிலும் அசத்திய திலக் வர்மா – விவரம் இதோ
ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ள வேளையில் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடாது என்று தெரிவித்து வருவதாலே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.