டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலக்கப்போவது இவங்க 3 பேர்தான் – மைக்கல் வாகன் கணிப்பு

Vaughan

ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. அதனைத் தொடர்ந்து தற்போது ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் சவுத்தாம்ப்டன் நகரில் மோத இருக்கின்றன. இந்த இறுதிப் போட்டிக்காக ஏற்கனவே நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று அடைந்தது.

INDvsNZ

இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் ? என்பது குறித்த கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் குறிப்பிட்ட இந்த மூன்று பேர் மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதலில் கைல் ஜேமிசனை குறிப்பிட்டு பேசினார்.

Jamieson

முதல் சில போட்டிகளிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமிசன் இந்த இறுதிப் போட்டியில் அனைவரும் கவனிக்கக் கூடிய ஒரு வீரராக இருப்பார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் கவனிக்க வேண்டிய ஒருவர். ஏனெனில் கடந்த பல தொடர்கள் ஆகவே இவரது ஆட்டம் வேறலெவலில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்த இறுதிப் போட்டியில் கலக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

மூன்றாவது நியூசிலாந்து அணியின் பிஜே வாட்லிங் நல்ல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் அவர் இந்த இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதால் அவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement