இந்திய அணி இப்படி செய்யும்னு நான் நெனச்சி கூட பாக்கல. நான் சொன்னது தப்பு – மன்னிப்பு கேட்ட மைக்கல் வான்

Vaughan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் மட்டும் எடுத்து இருந்ததால் அவுஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்கள் குவித்தது.

pant

- Advertisement -

இதன்பிறகு 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வெற்றியால் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. பல வருடங்களாக பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றியை மட்டும் கண்டு வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது தோல்வியை கண்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்திய அணியின் இந்த வெற்றிக்காக அனைவரும் தங்களது பாராட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை கண்டது.

IND-1

இந்த மோசமான தோல்வியால் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்து விடும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது இந்திய அணியின் இந்த வெற்றி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அணியை இவ்வாறு விமர்சனம் செய்தவர்களுள் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனும் ஒருவர்.

siraj

இதுகுறித்து தற்போது பேசியுள்ள மைக்கேல் வாகன் “இந்திய அணி இந்த தொடரை 0 – 4 என இழக்கும் என்று கூறியிருந்தேன். ஆனால் இந்திய அணி இவ்வளவு சிறப்பாக விளையாடும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்திய அணியின் இந்த வெற்றியால் இந்திய ரசிகர்கள் என்னை கடுமையாக தாக்கி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் நான் வருத்தப்படவில்லை. இளம் வீரர்களான சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார் மைக்கேல் வாகன்.

Advertisement