தற்போதுள்ள வீரர்களில் எனக்கு பிடித்த 3 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – மைக்கல் வாகன் கணிப்பு

Vaughan

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டும், தடை தள்ளி வைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருந்த பிரம்மாண்ட தொடரான ஐபிஎல் தொடரும் இந்த ஆண்டு கால வரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் எப்போது கிரிக்கெட் இயல்புநிலைக்கு திரும்பும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Shaw

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சமூக வலைதளம் மூலமாக பொழுதினை கழித்து வருகின்றனர். நாடே ஊரடங்கு முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தவிர முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் கிரிக்கெட் செய்திகள் சார்ந்த இணையதளமான cricbuzz இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவருக்கு பிடித்த 3 இந்திய வீரர்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மைக்கேல் வான் கூறியதாவது : நிறைய இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் .ஆனால் விராத் கோலி தான் என்னுடைய முதல் தேர்வு.

Kohli-2

ஏனெனில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் டாப் கிளாசில் விளையாடும் வீரர் அதுமட்டுமின்றி சேசிங் என்று வந்துவிட்டால் இந்திய அணிக்கு இவரே பெரிய பலம் அதுவே அவருடைய ஸ்பெஷல் என்று அவர் கூறினார். மேலும் ஒரு முறை நான் வெஸ்ட் இண்டீஸ்ஸிலோ அல்லது வேறு எங்கோ இருக்கும் போது 300-க்கு அதிகமான ரன்களை இந்தியா சேசிங் செய்வதாகவும் அப்போது கோலி 70 ரன்களில் நாட் அவுட்டாக உள்ளதாகவும் என்னிடம் கூறினார்கள்.

- Advertisement -

அந்த போட்டியின் இறுதியில் கோலி 130 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் அதுதான் கோலி என்றும் அவர் தெரிவித்தார். அடுத்ததாக கேஎல் ராகுல் மற்றும் அதற்கடுத்து ரோகித் சர்மா ஆகியோரை கூறினார். ராகுல் மிக அருமையான ஆட்டக்காரர் அவரது பேட்டிங் மிக வித்தியாசமானது. பேட்டிங்கை எவ்வளவு ஈஸியாக செய்ய முடியுமோ அவ்வளவு ஈஸியாக செய்கிறார் என்று தோன்றும் அளவிற்கு எளிமையாகப் ஆடக்கூடியவர் என்று கூறியுள்ளார்.

Rohith-4

மேலும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் ரோஹித்தை இந்திய அணி எடுக்கவில்லை. அப்போது நான் இந்திய அணிக்கு ஒரு ட்வீட் செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர் ஒரு அபாரமான ஆட்டக்காரர் என்று டட்வீட் செய்தேன். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக தன்னை நிரூபித்துக் காட்டினார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.