- Advertisement -
ஐ.பி.எல்

டிகே தொடர்ந்து விளையாடனும்.. சிஎஸ்கே மாதிரி ஆர்சிபி டிஎன்ஏ’வில் அதை மாத்தனும்.. மைக்கேல் வாகன்

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டியில் தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 6 போட்டிகளில் 6 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மேலும் நடப்புச் சாம்பியன் சென்னையை நாக் அவுட் செய்ததால் இம்முறை கண்டிப்பாக பெங்களூரு தங்களுடைய மகளிரணியை போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே 22ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. அதனால் 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் அந்த அணி பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

ஆர்சிபி டிஎன்ஏ:
இந்நிலையில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை போல பெங்களூரு அணி சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் குறைந்தது 80% போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஆனால் சொந்த மைதானத்தில் வெல்லும் பழக்கம் பெங்களூரு அணியின் டிஎன்ஏ’வில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே அதில் பயிற்சியாளர் ஆண்ட்டி ஃபிளவர் அதில் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் மைக்கேல் வாகன் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“ஆர்சிபி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ஆண்ட்டி பிளவர் மற்றும் நிர்வாகக் குழு இந்த ஆர்சிபி அணியை பற்றி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே அடுத்த ஆண்டு ஆர்சிபி வெற்றிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். ஃப்ளவர் எப்படி தன்னுடைய அணியை நடத்துவார் என்பது எனக்கு தெரியும். அவர்கள் தங்களுடைய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களிடமும் ஆராய்ச்சி நடத்தியிருப்பார்கள். எனவே அவருக்கு யாரை தக்க வைக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும்”

- Advertisement -

“ஏலத்தில் யாரை வாங்க வேண்டும் என்பதையும் அவர் கண்டறிந்திருப்பார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ஆர்சிபி அணி தங்களுடைய சொந்த மண்ணில் வெற்றி பெறும் டிஎன்ஏ’வை கொண்டிருக்கவில்லை. உங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தது 80% போட்டிகளை வெல்ல வேண்டும். அதில் தான் ஆண்டி ஃபிளவர் வேலை செய்ய வேண்டும். தினேஷ் கார்த்திக்கிற்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடரா? அவர் தொடர்வார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. வீட்டுக்கு போறப்போக்கில் சிஎஸ்கே’வின் மோசமான சாதனையை தனதாக்கிய ஆர்சிபி

“தொடர்ந்து விளையாடுங்கள் என்று நான் அவருக்கு ஆலோசனை தெரிவிப்பேன். அவர் நன்றாக விளையாடுகிறார். டு பிளேஸிஸ் ஆர்சிபி அணிக்கு விளையாடுவதை நாம் கடைசியாக பார்த்தோமா? என்பதும் தெரியாது. இந்த வீரர்கள் நீண்ட காலமாக விளையாடுகின்றனர். ஆனால் அவர்கள் கோப்பையை வெல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களை எப்போதும் பவுலர்கள் கைவிடுகின்றனர்” என்று கூறினார்.

- Advertisement -