ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 2 தொடர்களையும் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதே போல இம்முறை ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த 2 வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேப்டன்கள் விராட் கோலி, ரஹானே இம்முறை இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அதே போல ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற புஜாரா போன்ற ஒருவர் சுயநலமான ஸ்டைலில் விளையாட வேண்டுமென அவர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட வீரர் தற்போதைய அணியில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திடமான கேப்டன்கள்:
அதையும் தாண்டி இந்தியா வெல்வதற்கு செய்ய வேண்டியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2018 – 19, 2020 – 21 ஆகிய வெற்றிகளில் முதலில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். பின்னர் ரஹானே தலைமை தாங்கினார். அந்த இரண்டு வெற்றிகளிலும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தார். அவர் இந்திய வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பவராக செயல்பட்டார்”
“ஆனால் இம்முறை கௌதம் கம்பீர் பயிற்சியாளராக சுமாரான துவக்கத்தைப் பெற்றார். ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட இன்னும் வரவில்லை. பும்ரா தற்காலிக கேப்டனாக செயல்பட உள்ளார். ரோகித் சர்மா நிதானமாக செயல்படக் கூடியவர். பும்ரா சிரிப்புடன் அன்பாக செயல்படக் கூடியவர். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்று கூச்சலிடுவது போல் தெரியவில்லை”
புஜாரா போல:
“அதே போல புஜாராவின் இடத்தை நிரப்பக்கூடிய ஒருவர் இந்தியாவுக்கு தேவை. கடந்த 2 தசாப்தங்களில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு அணிகள் வென்ற போது அவர்களது அணியில் ஒருவர் பாறையைப் போல் விளையாடினார்கள். ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் பொறுமையாக விளையாடி ஆஸ்திரேலிய பவுலர்களை 4, 5வது ஸ்பெல் வரை பந்து வீச வைத்து களைப்படைய வைக்க வேண்டும்”
இதையும் படிங்க: வயசாகிடுச்சேன்னு நினைக்காதீங்க.. 2011 டிராவிட் மாதிரி கோலி ஆஸியில் சம்பவம் செய்வாரு.. கங்குலி ஆதரவு
“புஜாரா அதை ஆஸ்திரேலியாவில் அற்புதமாக செய்தார். 2010 – 11 தொடரில் இங்கிலாந்துக்காக அலெஸ்டர் குக் அதை செய்தார். ஆஸ்திரேலியாவில் வெல்வதற்கு உங்களில் ஒருவர் உறுதியான பிடிவாதமான சுயநலமாக பேட்டிங் செய்வது அவசியம். அதைச் செய்ய உங்களுக்கு சில ஷாட்டுகள் மட்டுமே தேவை” என்று கூறினார். அந்த வகையில் பின்னாடி இவர்களுக்கு தாண்டி இம்முறை இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாலில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.



