ரொம்ப பெரிய மைதானம் தான். ஆனால் நான் நெனச்ச அளவுக்கு இல்லை – அகமதாபாத் மைதானத்தை கிண்டல் செய்த – மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

பிசிசிஐயின் சார்பில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா மைதானம் கட்டமைக்கப்பட்டு வருகிறது . கடந்த பல மாதங்களாக 700 கோடி ரூபாய் செலவில் இந்த மைதானம் கட்டப்பட்டு வருகிறது .

முன்னதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானம் தான் உலகின் மிகப் பெரிய மைதானம் . இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க்கக்கூடிய அளவிற்கு மிகப்பிரமாண்ட மைதானமாக இருந்தது இப்பொது அதனை முறியடிக்கும் வகையில் மோதிரா மைதானம் தயாராகி வருகிறது.

- Advertisement -

மேலும் தற்போது குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுவரும் இந்த மைதானத்தில் ஒரு லட்சத்தி பத்தாயிரம் பேர் வரை அமர்ந்து கிரிக்கெட்டை ரசிக்கலாம். இதனால் கட்டுமான முடிந்தபின் இது உலகத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெயரைப் பெறும். மேலும் இந்த மைதானத்தில் சர்வதேச கட்டமைப்பில் பல வசதிகள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் செய்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மைதானத்தின் கழுகுப்பார்வை புகைப்படத்தை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது . இந்த புகைப்படத்தை பார்த்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிண்டல் அடிக்கும் விதமாக ”இது கிட்டத்தட்ட எங்கள் மைதானத்தை போல் உள்ளது ” என்று பதிவு செய்தார் இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இந்தியா அணி குறித்த எந்த பதிவு போடப்பட்டாலும் முதல் ஆளாக கருத்து சொல்ல வரும் இவர் இந்த மைதானத்தை பார்க்க முதலில் நேராக இந்தியாவிற்கு வர சொல்லுங்கள் என்பது போன்ற கருத்துக்களை ரசிகர்கள் இணையத்தில் பதிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement