ஒரு போட்டியை வைத்து இவரை நீக்கியது தவறு. இவரிடம் அபரிவிதமான திறமை இருக்கு – மைக்கல் ஹசி ஆதரவு

Hussey
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்கள் இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்தது. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் விமர்சித்து வந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரரான பிரித்திவி ஷா முதல் இன்னிங்சில் டக்-அவுட் மற்றும் 2வது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் சுனில் கவாஸ்கர்,ஜாகிர் கான், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி என அனைவரும் விமர்சித்து வந்தனர்.

- Advertisement -

இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி இன்று (நவ்.26) மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய பிரித்திவி ஷா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக துவக்க வீரராக சுப்மன் கில் அறிமுகமானார்.

Shaw

இந்நிலையில், இளம் வீரர் பிரித்திவி ஷாவை அனைவரும் விமர்சித்து வருகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி பிரித்திவி ஷாவுக்கு சப்போர்ட் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ பிரித்வி ஷா மீது தேர்வுக்குழுவினர் நம்பிக்கை வைக்கவேண்டும். இந்த முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பி இருந்தாலும் இதற்கு முன்னர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்”. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த அடிலெய்ட் மைதானத்தில் பிரித்வி ஷா தோல்வியடைந்துள்ளார்.

Shaw

ஜோ பர்ன்ஸ் முதல்தர கிரிக்கெட்டில் 7 க்கும் குறைவாக சராசரியை பெற்று இருந்தார். இருப்பினும் அவர் மீது எங்கள் தேர்வு குழுவினர் நம்பிக்கை வைத்து சேர்த்தனர். ஜோ பர்ன்ஸ் முதல் இன்னிங்சில் ஓரளவு விளையாடி இருந்தாலும் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு போட்டியில் மோசமாக விளையாடியதன் காரணமாக அணியில் இருந்து நீக்க விடக்கூடாது. அவர் மீது அனைவரும் நம்பிக்கை வைத்து அவருக்கு அவருடைய தவறை எடுத்துக் கூறுங்கள். பிரித்வி ஷாவிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. அவரை இழந்து விடாதீர்கள்” என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

Advertisement