தோனி கேப்டனாக இருந்தபோது இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை – வெஸ்ட் இண்டீஸ் வீரர் புகழாரம்

Holding
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அவர் ஓய்வு பெற்று ஒரு வாரம் ஆகியும் அவர் குறித்த செய்திகள் அடங்கிய பாடில்லை. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்கள் சென்னையில் பயிற்சிகளை முடித்த தோனி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங் தோனி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி கேப்டனாக இருந்தபோது அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

போட்டியின் முடிவு தன் கையை விட்டு நழுவும் சூழ்நிலையில் கூட வீரர்களை அழைத்து அமைதியாக உரையாற்றுவார். பிறகு அனைத்தும் பொறுமையாக மாறும். இதேபோன்று தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய ஹோல்டிங் கூறுகையில் :

Dhoni

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமல்ல தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். இத்தனைக்கும் மேலாக அவர் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நிரந்தர கீப்பராக இருந்துள்ளார். இதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். மேலும் ஸ்டம்புக்கு பின்னால் இத்தனை வகையான போட்டிகளுக்கும் கீப்பிங் செய்வது மிக அபாரமானது.

msdhoni

அதே வேளையில் ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை அடித்தது எல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத சாதனைகளாகும். அதிலும் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் ஆக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தியுள்ளார். மேலும் அனைத்து சாதனைகளையும் அவர் செய்து காட்டி உள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement