இவர் இல்லாம இந்திய அணி டெஸ்ட் தொடரை ஜெயிச்சா அப்போ ஒதுக்குறேன் இந்தியா வெயிட்ன்னு – கிளார்க் கிண்டல்

Clarke
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. அது முடிந்த உடன், டிசம்பர் 17ஆம் தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறப்போகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியபோது, இந்த தொடரை விராட் கோலியின் தலைமையில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

indvsaus

- Advertisement -

மேலும், அந்த தொடரில் விராட் கோலி மற்றும் ஆகிய ரஹானே இருவரும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தனர். ஆனால் இந்த வருடம் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருப்பார். முதல் போட்டி முடிவடைந்த உடன் தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியாவிற்கு திரும்புகிறார் விராட்கோலி. இது குறித்து பலரும் பலவாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், விராட் கோலி இல்லாததைப் பற்றி பேசியிருக்கிறார். மேலும் அவர் இல்லாத நேரத்தில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

Kohli-3

இந்திய அணியில் விராட் கோலி போன்ற ஒரு வீரரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவர் இல்லாத இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். யார் அவருக்குப் பதிலாக ஆடப் போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. விராட் கோலி இல்லாமல் ஒரு வேளை இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த ஒரு வருடத்திற்கு அந்த வெற்றியை இந்திய அணியினர் கொண்டாடலாம். அதுபோன்ற வெற்றிகள் தான் உண்மையான வெற்றி.

Rahane

கேஎல் ராகுல் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இதற்கு முன்னர் விளையாடியிருக்கிறார். டெஸ்ட் தொடரிலும் நன்றாக விளையாட முடியும் என்று கூறலாம். ஆனால் அவரால் விராட் கோலியின் இடத்தை நிரப்ப முடியாது. அதே நேரத்தில் ரஹானேவும் மிகச் சிறந்த வீரர் அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கேப்டனாகவும் அவர் நன்றாக செயல்பட்டிருக்கிறார். ஒருவேளை விராட் கோலி இல்லாத நேரத்தில் ரகானே வெற்றி பெற்று வரலாறு படைத்ததுவிட்டால் அவரது பெயர் நீண்ட காலத்திற்கும் நிலைக்கும் என்று தெரிவித்திருக்கிறார் மைக்கல் கிளார்க்.

Advertisement