நான் பார்த்ததில் 7 சிறந்த பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – கிளார்க் தேர்வு செய்த அந்த வீரர்கள்

Clarke
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் தற்போது அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற அடுத்த சிலமாதங்களுக்கு வாய்ப்பில்லை.

Clarke

- Advertisement -

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாளை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் என அனைவரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளம் மூலம் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலிய அணிக்கு 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டனும், ஆல்ரவுண்டருமான மைக்கேல் கிளார்க் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதன்படி தனது கிரிக்கெட் கரியரில் தான் எதிர்த்து ஆடி சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேன்கள் யார் என்பது குறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் சிறந்த 7 (பெஸ்ட் 7 பிளேயர்ஸ்) பேட்ஸ்மேன்களை அவர் மொத்தமாக தேர்வு செய்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அதன்படி 7 வீரர்கள் பட்டியலில் முதல் பெயராக அவர் சொன்னது பிரைன் லாரா வைதான். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல் டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவரை சிறந்த பேட்ஸ்மேனாக முதலில் தேர்வு செய்தார். அடுத்ததாக சச்சின் டெண்டுல்கர் பெயரை தெரிவித்த கிளார்க் நான் பார்த்ததிலேயே மிக டெக்னிக்கலாக சிறப்பாக விளையாடும் வீரர் என்று சச்சினை புகழ்ந்தார்.

- Advertisement -

மூன்றாவதாக தற்போதைய இந்திய அணி கேப்டன் விராட்கோலி 3 வடிவத்திற்கும் அசத்தலாக ஆடுவதால் அவரை தலை சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார். அதற்கடுத்து நான்காவதாக மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் அதற்கடுத்து ஆல்டைம் பெஸ்ட் ஆல்-ரவுண்டராக ஜாக் காலிஸ் தேர்வு செய்தார். மேலும் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் மற்றும் சங்ககாராவை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

abd

கிளார்க் தேர்வு செய்த அந்த சிறந்த 7 பேட்ஸ்மேன்கள் : 1) லாரா 2)சச்சின் 3) விராட் கோலி 4) டிவில்லியர்ஸ் 5) காலிஸ் 6) பாண்டிங் 7) சங்ககாரா

Advertisement