சர்வதேச கிரிக்கெட்டில் நான் எதிர்கொண்டதிலேயே இவர்தான் அதிவேக பந்துவீச்சாளர் – கிளார்க் ஓபன்டாக்

Clarke

2015ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்காக கைப்பற்றிக் கொடுத்த, அந்த அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலேயே தான் எதிர்கொண்ட அதிவேக பந்து வீச்சாளர் யார் என்பதை தெரிவித்திருக்கிறார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக இடம்பிடித்த மைக்கேல் கிளார்க், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 12 வருடங்களாக கிரிக்கெட் போட்டிகளில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அவர்,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சுமார் 17000 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கியமான வீரராகவும் திகழ்ந்த அவரை, விரைவில் விக்கெட் எடுத்தால் தான் எதிரணியால் வெற்றி பெற முடியும் என்ற அளவிற்கு தன்னுடைய பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Clarke 2

இப்படி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய அவர், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட வேகப் பந்து வீச்சாளர்களில், அதிவேகமான பந்துகளை வீசியது பாகிஸ்தான் அணியின் வீரரான சோயிப் அக்தர் தான் என்று கூறியிருக்கிறார். இதுபற்று கூறிய அவர், நான் விளையாடிய காலத்தில் நிறைய வேக பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டிருக்கிறேன். அவர்களில் சோயிப் அக்தரின் பந்து வீச்சு தான் அதிவேகமாக இருக்கும். அவர் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமை உடையவர். கிரிக்கெட்டில் வெவ்வேறு விதமான வேகப் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

சில பௌலர்கள் முதல் மூன்று ஓவர்களை மட்டுமே வேகமாக வீசுவார்கள். இங்கிலாந்தின் ப்ளின்டாஃப் 12 ஓவர்கள் வரை அதிவேகமாக பந்து வீசக்கூடிய திறமை உடையவர் என்று கூறிய அவர், தன்னுடைய சொந்த அணி பௌலர்களான ப்ரட் லீ, ஷான் டெய்ட் பற்றியும் கூறியுள்ளார்.
வலைப் பயிற்சியின்போது ப்ரட் லீ, ஷான் டெய்ட் மற்றும் ஜேசன் கில்லஸ்பி ஆகியோரின் பந்துகளை எதிர்கொண்டிருக்கிறேன். அவர்களும் வேகமாக பந்து வீசக் கூடியவர்கள் தான் என்றாலும் அவர்களைவிட சோயிப் அக்தர் அதிவேகமாக பந்து வீசக்கூடிய திறமை உடையவர் என்று அவர் கூறியிருக்கிறார்.

Akhtar

சோயிப் அக்தரின் ஆரம்பகால கிரிக்கெட் வழ்க்கையில் அவரின் பந்து வீசும் முறை குறித்து பல்வேறு விமர்ச்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் அதன்பிறகு அது எல்லாம் மறைந்துபோய், கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளராகா அவர் உருவெடுத்தார்.

- Advertisement -

Akhtar

சமீபத்தில் சோயிப் அக்தரின் பந்து வீச்சில் காயமடைந்த நான் அதிலிருந்து மீண்டு வர நிறைய நாட்கள் ஆனது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்தார். ப்ரையன் லாரவிற்கு, அக்தர் வீசிய பௌன்சர் பந்தை பார்த்துவிட்டு நான் பேட்டிங் விளையாட வேண்டுமா என்றுகூட யோசித்தேனென்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான டேரன் சம்மியும் கூறியிருக்கிறார்.

Advertisement