- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்சிபி மட்டும் கோப்பை ஜெய்ச்சுட்டா அவர கையிலேயே பிடிக்க முடியாது.. நாசர் ஹுசைன், ஆதர்டன் கிண்டல்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 2008 முதல் அனில் கும்ப்ளே, விராட் கோலி தலைமையில் வெறித்தனமாக போராடிய ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

அதனால் நிறைய கிண்டல்களை சந்தித்து வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக லீக் சுற்றில் 7 வெளியூர் போட்டிகளிலும் வென்ற முதல் அணியாக பெங்களூரு வரலாறு காணாத சாதனை படைத்தது. அது போக அந்த அணிக்கு 9 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளனர்.

- Advertisement -

கையில் பிடிக்க முடியாது:

எனவே இம்முறை இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் 2025 ஐபிஎல் கோப்பையை மட்டும் ஆர்சிபி வென்று விட்டால் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கை கையில் பிடிக்க முடியாது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் ஆதர்டன் ஜாலியாக கிண்டல் செய்துள்ளனர்.

அதாவது இங்கிலாந்தில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தினேஷ் கார்த்திக் கடந்த சில வருடங்களாகவே வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அங்கே அவர் பலமுறை நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டனை நேரலையில் ஜாலியாக கிண்டல் செய்துள்ளார். அப்படிப்பட்ட தினேஷ் கார்த்திக் இம்முறை ஐபிஎல் கோப்பையை பயிற்சியாளராக வென்று வந்தால் தங்களை இன்னும் அதிகமாக கிண்டலடிப்பார் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

- Advertisement -

கோப்பை வெல்லுமா:

இது பற்றி நாசர் ஹுசைன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஒருவேளை அவர்கள் வென்றால் தினேஷ் கார்த்திக் தாங்க முடியாதவராக இருப்பார். ஏனெனில் பயிற்சியாளராக செயல்பட்ட முதல் வருடத்திலேயே அவர் ஆர்சிபி அணிக்காக கோப்பையை வெல்வார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணி இறுதிப்போட்டியில் ஜெயிக்கணும்னா இந்த மாற்றத்தை செய்தே ஆகனும் – ரசிகர்கள் கோரிக்கை

அதே நிகழ்ச்சியில் மைக்கேல் ஆதர்டன். “அப்படி மட்டும் நடந்தால் தினேஷ் கார்த்திக் சிறந்த நேரங்களில் தாங்க முடியாதவராக இருப்பார். அதில் சந்தேகமில்லை. ஜான் டெரி போல விருது வழங்கும் விழாவில் விராட் கோலியுடன் அவர் ஆர்சிபி அணியின் வெற்றி கோப்பையை பிடித்துக் கொண்டு நிற்பார்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அவர்களுடைய பேச்சை ட்விட்டரில் பார்த்த தினேஷ் கார்த்திக். “இந்த வர்ணனைக்கு கொஞ்சம் இளம் எனர்ஜி தேவைப்படுகிறது. விரைவில் வருகிறேன்” என்று கிண்டலான பதிலைக் கொடுத்துள்ளார்.

- Advertisement -