இங்கிலாந்து முன்னாள் கேப்டன் “Michael Vaughn “-யை மூக்குடைத்த இந்திய ரசிகர்.!

michael

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 என்ற இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மான் மற்றும் கேப்டனுமான “மைக்கல் வாஹன்” இங்கிலாந்து அணியின் வெற்றியில் நிலை குறித்து ஒரு பதிவினை செய்துள்ளார்.

அந்த குறிப்பில், இங்கிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது எப்படி என்றால், “simple” இன்னும் இந்த போட்டி முடிவடைய இரண்டு நாட்கள் உள்ளன. மொத்தமாக “6 Session ” உள்ளது. இந்த 6 Session-லும் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தால் நிச்சயம் வெற்றி அடைந்து விடும். டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் என்று கேளியாக அவர் கருத்தினை பதிவிட்டு உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டினை நன்கு அறிந்த அவர் இவரு கூறியது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு பதில் அளித்த இந்திய ரசிகர், “simple” இந்தியாவிற்கு 10 நல்ல பந்துகள் தேவைப்படுகிறது. கிடைத்தால் இந்தியா இந்த போட்டியில் வென்றுவிடும். என்று பதில் அளித்திருந்தார். இந்திய ரசிகருடைய இந்த பதிவு நகைச்சுவையாக இருந்தாலும் இதுதான் நாடாகும் என்பதை குறிக்கும் விதமாக உள்ளது.

மேலும், டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்சில் 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்தாலே, எதிர் அணியால் அதை துரத்துவது கடினம் என்று நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் மைக்கல் வாஹன் இப்படி தெரிவித்திருப்பது சற்று கெளியாகவே உள்ளது.