- Advertisement -
ஐ.பி.எல்

ரவீந்திர ஜடேஜாவை வெளிய அனுப்பியதால் தான் சி.எஸ்.கே அணி இந்த நிலைமையில் இருக்கு – மைக்கல் வாகன் சாடல்

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே 2025-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது.

ரவீந்திர ஜடேஜாவை வெளியேற்றியது தவறு : மைக்கல் வாகன்

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் மிகச்சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அனுபவம் இல்லாத இளம் வீரர்களை கொண்ட சி.எஸ்.கே அணி தடுமாறி வருவது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக இடம்பெறாதாலும் சென்னை அணியால் பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்கிற விமர்சனமும் இருந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் சென்னை அணி ரவீந்திர ஜடேஜாவை விட்டுக் கொடுத்திருக்க கூடாது என்றும் அனுபவம் வாய்ந்த அவரை சிஎஸ்கே அணி வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சிஎஸ்கே அணி தற்போது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு நிலையில் உள்ளது. அவர்களுக்கு எங்கு நிற்பது என்று தெரியவில்லை. கேப்டன் களத்தில் ஒன்றும் புரியாமல் நிற்கிறார்.

வீரர்களும் எவ்வித ஆக்ரோஷமும் இல்லாமல் தோல்வி மனநிலையுடனே விளையாடி வருகிறார்கள். ஐந்து ஐபிஎல் தொடர்களை வென்ற போது மிகச்சிறந்த கேப்டனாக தோனி இருந்தார். அவர் கீழ் வரிசையில் இறங்கி போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். ஆனால் தற்போது சிஎஸ்கே அணியில் அனுபவம் இல்லாத வீரர்களாக இருக்கின்றனர். டாப் ஆர்டர் வீரர்கள் சரியாக செயல்படாததால் இந்த தொடரில் அவர்கள் சரிவை சந்தித்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த போட்டிக்கான சி.எஸ்.கே அணியில் பிரேவிஸ் விளையாடுவாரா? – ஸ்டீபன் பிளமிங் பதில்

அதேபோன்று சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்தது மிகவும் தவறான ஒரு முடிவு. ஏனெனில் நீங்கள் புதிய வீரர்களை உருவாக்க விரும்பினால் உங்களுக்கு அடிப்படையில் அனுபவம் தேவை. ஜடேஜா இருந்திருந்தால் அவரது அனுபவத்தை பந்துவீச்சில் உங்களுக்கு வழங்கி இருப்பார். ஆனால் தற்போது அவர் இல்லாமல் சிஎஸ்கே அணி பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருவதாகவும் மைக்கேல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -