இந்திய அணியை யூஸ்லெஸ் என்று திட்டிய மைக்கல் வாகன் – இம்முறை என்ன சொன்னார் தெரியுமா ?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைய, இரண்டாவதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மூன்றாவதாக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா படு மோசமான தோல்வி சந்தித்தது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியை ஒரு “யூஸ்லெஸ் அணி” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் சாடியிருந்தார். எப்போதுமே இந்திய அணியை விமர்சித்து பேசும் அவருக்கு மீண்டும் ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் பதிலடி கொடுத்து வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளதால் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு ஆதரவாகவும், இந்திய அணியை புகழும் விதத்திலும் அவர் சில பதிவுகளை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ ? அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். அந்த வகையில் இந்திய அணி ஒரு சிறப்பான அணி தான். எப்போது நன்றாக விளையாட வேண்டுமோ அந்த நேரத்தில் அதை சிறப்பாக செய்து காட்டியுள்ளது. இப்போதுள்ள இந்திய அணி மிக வலிமையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

விராட்கோலி சரியான யுக்திகளை திறமையுடன் செயல்படுத்தி அணியை வழி நடத்துகிறார் என்றும் அதுமட்டுமின்றி போட்டியை தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டி உள்ளார் எனவும் விராட் கோலியையும், இந்திய அணியையும் அவர் புகழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement