காலம் கடந்தாச்சு, உலகமே இந்தியாவால் பயனடையும் போது நீங்க தலை குனியலாமா? மைக்கேல் வாகன் ஆதங்கத்துடன் பேசியது என்ன

Vaughan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. ஆனால் இந்த தொடரில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி படுதோல்வியை சந்தித்து பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு வெளியேறியுள்ளது. இத்தனைக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் அழுத்தமான போட்டிகளில் சொதப்பி இந்தியா இப்படி வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்துள்ளது.

Jos Buttler Rohit Sharma KL Rahul

- Advertisement -

அதை விட தரத்தில் டி20 உலக கோப்பையை மிஞ்சும் ஐபிஎல் தொடரை ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் இந்தியா அதில் ஏராளமான தரமான வீரர்களை கண்டறிந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதே இந்த தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தரமான வீரர்கள் இருந்தும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பழைய பஞ்சாங்கத்தை போல இந்தியா இன்னும் பழைய டெக்னிக்கை பின்பற்றி வருவதே இந்த தோல்விக்கு காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

நீங்க தலைகுனியலாமா:

இந்த உலகக் கோப்பையில் கூட இந்தியாவை சாய்க்க ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தங்களுக்கு உதவியதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்தது போல ஒட்டுமொத்த உலகிற்கும் ஐபிஎல் தொடரால் இந்தியா நன்மை செய்து வருவதாக மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஆனால் அதே ஐபிஎல் தொடரையும் அதிலிருந்து கிடைக்கும் தரமான வீரர்களையும் சரியாக பயன்படுத்தாத இந்தியா அதிரடியாக விளையாடும் இங்கிலாந்தின் லேட்டஸ்ட் யுக்தியை பயன்படுத்தாமல் இன்னும் பழைய யுக்திகளை கையாள்வதே 2013க்குப்பின் அடுத்த ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவிப்பதற்கு காரணமென்று அவர் கூறியுள்ளார். இது பற்றி பிரபல டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு.

ENg vs IND Jos Buttler Alex hales

“வெள்ளைப் பந்து கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா எதிர்பார்ப்புக்கு குறைவாகவே செயல்பட்டு வருகிறது. ஏனெனில் உலகில் ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடருக்கு சென்ற பின் தங்களுடைய வளர்ச்சிக்கு ஐபிஎல் உதவுவதாக சொல்கிறார்கள். ஆனால் அதிலிருந்து இந்தியா என்ன பயனடைந்தது? குறிப்பாக 2011இல் சொந்த மண்ணில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது தவிர்த்து அவர்கள் என்ன சாதித்தார்கள்? மேலும் அவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் காலாவதியான யுக்திகளை பின்பற்றி விளையாடுகிறார்கள். அதிலும் அற்புதமான திறமை கொண்ட ரிஷப் பண்ட் போன்றவர்களை அவர்கள் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள்? அவர்களிடம் இருக்கும் திறமைக்கு டி20 கிரிக்கெட்டில் இப்படி விளையாடுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது”

- Advertisement -

“அவர்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர் ஆனால் அவர்களது அணுகுமுறை சரியாக இல்லை. குறிப்பாக இந்த காலத்தில் போய் அவர்கள் வெறும் 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதிலும் 10 – 15 வருடங்களுக்கு முன்பாக அவர்களது அணியில் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, வீரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி ஆகியோரைப் போல் டாப் 6 பேட்ஸ்மேன்களில் இப்போது ஏன் யாரும் பந்து வீசுவதில்லை? இப்போதைய அணியில் எந்த பேட்ஸ்மேனும் பந்து வீச விரும்புவதில்லை என்பதால் கேப்டன் 5 பேரை மட்டுமே பயன்படுத்துகிறார். டி20 கிரிக்கெட்டில் இருபுறமும் சுழற்றும் பின்னர்கள் தேவை என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தியாவிடம் இருந்த நிறைய லெக் ஸ்பின்னர்கள் இப்பொது எங்கே? உலக கிரிக்கெட்டுக்கு இந்தியா மிகவும் அவசியமான ஒன்றாகும்”

Michael-Vaughan and IND Team

“அவர்களிடம் இருக்கும் திறமைக்கு இன்னும் நிறைய வெற்றிகளை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக 2016 டி20 உலக கோப்பையில் சொந்த மண்ணில் கூட அவர்களால் பைனலுக்கு முன்னேற முடியவில்லை. இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அசாத்தியமான வெற்றியைக் பெற்றுக் கொடுத்த விராட் கோலியின் இன்னிங்ஸ் இந்தியர்களிடம் இருக்கும் அபாரமான திறமைக்கு எடுத்துக்காட்டாகும். இருப்பினும் இந்தியா சிறந்த வீரர்களின் பின்னணியில் பதுங்கியுள்ளது. ஆனால் அந்த சிறந்த வீரர்கள் ஓட்டையை போல் செயல்படுகிறார்கள். அவர்களிடம் பந்து வீச்சு குறைவாக உள்ளது. ஸ்பின் யுக்திகளும் அதிகப்படியாக இல்லை” என்று கூறினார்.

Advertisement