பிரதமருக்கு இணையான கவுரவம், மரியாதை இங்கு தோனிக்கும் கிடைக்குது – மைக்கல் வாகன் புகழாரம்

Michael Vaughan and MS DHoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் ரசிகர்கள் தோனியை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது இந்தியாவின் எந்த மைதானத்தில் தோனி விளையாடினாலும் அவருக்கென ரசிகர்கள் கூட்டம் மஞ்சள் படையில் மைதானங்களை ஆக்கிரமிக்கின்றன.

பிரதமருக்கு இணையான பாதுகாப்பு தோனிக்கு இருக்கு : மைக்கல் வாகன்

அதோடு பொதுவெளியில் அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டுகளிக்கிறார்கள். இப்படி தோனி இத்தனை ஆண்டுகளாக எங்கு சென்றாலும் அவருக்கு மரியாதை கிடைப்பது பலரையும் வியக்க வைத்து வருகிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் ஒரு சில போட்டிகளை அவர் மைதானத்தில் நேரில் பார்த்தார்.

- Advertisement -

அப்போதும் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து கிடைத்தது. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வந்தாலும் இன்றளவும் அவர் குறித்த செய்திகள் தொடர்ந்து இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இந்நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு இந்தியாவில் கிடைப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : டி20 உலக கோப்பை தொடரின் போது தோனி பல இடங்களுக்கு பயணம் செய்து சில போட்டிகளை நேரில் மைதானத்திலும் பார்த்தார். அப்போது தோனிக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு வியக்க வைக்கும் வகையில் இருந்தது. முன்பு சச்சினுக்கு மட்டும் தான் பெரிய கவுரவம் இந்தியாவில் கிடைக்கும். தற்போது அதே அளவு கவுரம் தோனிக்கும் இந்தியாவில் கிடைக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த 2026 ஆண்டும் ஆர்.சி.பி அணி கோப்பையை ஜெயிக்க அதிக வாய்ப்பிருக்கு – சுரேஷ் ரெய்னா அதிரடி

இந்தியாவில் அவருக்கு ஒரு பிரதமருக்கு கிடைக்கும் பாதுகாப்பு கிடைத்து வருகிறது. தோனி இந்தியாவில் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக உண்மையான ஆர்மி இருப்பது போலவே இருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர் என மைக்கல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement