இங்கிலாந்து அணியில் ரஷித்தை சேர்த்தது தவறு.! மைக்கேல் வாகன் எதிர்ப்பு.! காரணம் இதோ

Adil-Rashid-England
Adil-Rashid-England

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணியும் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ளது. இதை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.

adil-rashid

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியில் சூழல் பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் சேர்க்கப்பட்டதிற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் ஆதில் ரஷீத் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வேகன் தெரிவிக்கையில்.”குறுகிய கால டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்த ஒருவரை எப்படி திடீரென்று டெஸ்ட் அணியில் சேர்ப்பீர்கள்.

அவர் சிறப்பாக ஆடுகிறாரோ இல்லையோ என்பதை மறந்து விடுவோம். ஆனால், அவரை டெஸ்ட் அணியில் சேர்த்தது மிகவும் அபத்தமானது ” என்று தெரிவித்துள்ளார். மைக்கேல் வேகன் கூறிய இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து அணியின் மற்றுமொறு முன்னாள் வீரரான டேரன் காஃப் ” மைக்கேல் வேகன் கூறுவது நூறு சதவீதம் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்காக 10 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆதில் ரஷீத் இதுவரை 38 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். அதன்பிறகு,அவர் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி குறுகியகால டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட போவதாக ஆதில் ரஷீத் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

England Nets Session

நடைபெற்று வரும் இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் ஆதில் ரஷீத், 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் .இதனால் அவருக்கு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பளிக்கபட்டுள்ளது. ஆனால், அவரை டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.