அடுத்த வருசமும் இந்தியாவை மீண்டும் அடித்து நொறுக்குவோம் – வெற்றியால் முருங்கை மரம் ஏறி மைக்கேல் வாகன் பேசியது என்ன

Michael-Vaughan and IND Team
Advertisement

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அதிரடியாக செயல்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்று டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் நெதர்லாந்திடம் தோற்றதை தவிர்த்து ஆரம்பம் முதலே அசத்தலாக செயல்பட்ட இங்கிலாந்து ஃபைனலில் 1992 உலகக்கோப்பை மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாய்ச்சவடால் விட்ட பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 30 வருடங்கள் கழித்து பழி தீர்த்தது. மேலும் ஏற்கனவே 2019 உலகக்கோப்பையும் வென்றுள்ள அந்த அணி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என 2 உலக கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.

England T20 World Cup

ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து 2017 முதல் தன்னுடைய அணுகுமுறையை தலைகீழாக மாற்றி அதிரடியாக செயல்படும் யுக்தியை கையிலெடுத்து இயன் மோர்கன் தலைமையில் 2019 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அவருக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் பட்லர் தலைமையில் சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடர்களில் சாய்த்த இங்கிலாந்து அதே அதிரடியான அணுகு முறையில் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அடித்து நொறுக்குவோம்:

அதிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியாவை செமி ஃபைனலில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 170 ரன்களை விளாசி அடித்து நொறுக்கிய இங்கிலாந்து அனைவரது பாராட்டுகளை பெற்றது. அதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் இங்கிலாந்தை உலகின் அனைத்து அணிகளும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் 2019, 2022 உலகக் கோப்பைகளை தொடர்ந்து அடுத்ததாக 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையையும் இங்கிலாந்தே வெல்லுமென முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

ENg vs IND Jos Buttler Alex hales

பொதுவாகவே வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் கில்லியாக செயல்படும் இந்தியா சமீப காலங்களில் எதிரணிகளை துவம்சம் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. குறிப்பாக 2011இல் தோனி தலைமையில் சொந்த மண்ணில் தான் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை வென்றது. ஆனால் தற்சமயத்தில் இருக்கும் பார்மில் நிச்சயமாக இந்தியாவை சாய்த்து மீண்டும் இங்கிலாந்து வெல்லும் என்று தைரியமாக கூறியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இங்கிலாந்தின் வெற்றிப் பயணத்தில் அடுத்த பெரிய டிக்கெட் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதாகும். அந்த தொடரிலும் வெல்லும் அணியாக கருதப்படும் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்ல தரமான சுழல் பந்துவீச்சு கூட்டணி போதுமானது. அந்த தொடர் துவங்கும் போது சொந்த மண்ணில் இந்தியா தான் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் என்று அனைவரும் சொல்வார்கள். அப்படி சொல்வது முட்டாள்தனமாகும். ஏனெனில் இங்கிலாந்தை தோற்கடித்து விட்டு தான் நீங்கள் கோப்பையில் கையை வைக்க முடியும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை. இது அடுத்த சில வருடங்களுக்கு நீடிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Vaughan

அத்துடன் விக்கெட் கீப்பராக கோப்பையை வென்றுள்ள ஜோஸ் பட்லர் இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனி போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தமக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவிக்கும் அவர் அது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “முதல் தொடரிலேயே பட்லர் கோப்பையை வென்று அசதியுள்ளார். தற்போது 32 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்தியாவுக்காக எம்எஸ் தோனி நிறைய வருடங்கள் கேப்டனாக செயல்பட்டார். அதே போல பட்லரும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி சாதிக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement