இரண்டாவது ஒருநாள் போட்டியில் நிச்சயம் விராட் கோலி இதைச் செய்வார் – மைக்கல் கிளார்க் கணிப்பு

Clarke and Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பெர்த் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை மிக எளிதாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பார் : மைக்கல் கிளார்க்

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

முதலாவது போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்திக்க நட்சத்திர வீரர்கள் பலரும் பேட்டிங்கில் ஜொலிக்காதே காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோலி ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக இந்த இரண்டாவது போட்டியில் அவர்கள் இருவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி சதம் அடிப்பார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

அடிலெய்டு ஓவல் மைதானத்தை பொறுத்தவரை விராட் கோலி அனைத்து வகையான போட்டிகளிலும் மிகச்சிறப்பான ரெக்கார்டை வைத்துள்ளார். எனவே நிச்சயம் இரண்டாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இந்திய அணியை பொறுத்தவரை அவர்களது டாப் ஆர்டர் பேட்டிங் லைன் அப்பை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஏனெனில் எப்பொழுதுமே டாப் 3 வீரர்கள் தோல்வியடைய வாய்ப்பில்லை.

இதையும் படிங்க : 38 வயதில் இப்படி ஒரு சாதனையா? அறிமுக போட்டியிலேயே அசரவைத்த பாகிஸ்தான் வீரர் – விவரம் இதோ

அதேபோன்று பந்துவீச்சு துறையில் அவர்கள் சில மாற்றங்களை செய்யலாம். ஏனெனில் மூன்று ஆல்ரவுண்டர்களுடன் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்கள் சரிதான். ஆனால் ஒருநாள் போட்டிகளின் போது அது எந்த அளவிற்கு சிறப்பான ஒன்று என தெரியவில்லை என்றும் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.

Advertisement