- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சஞ்சு சாம்சனுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக்கொண்டார் – மைக்கல் கிளார்க் புகழாரம்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக இருந்த சஞ்சு சாம்சன் இடையில் ஏற்பட்ட பார்ம் அவுட் காரணமாக தனது வாய்ப்பினை இழந்தார். இருந்தாலும் இடது கை, வலது கை துவக்க வீரர்கள் காம்பினேஷன் இருக்க வேண்டும் என்பதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பினை பெற்ற அவர் அந்த போட்டியில் அதிரடியான துவக்கத்தை அளித்திருந்தாலும் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியாமல் ஏமாற்றம் அளித்திருந்தார். அவரது இந்த செயல்பாடு கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

சஞ்சு சாம்சனை பாராட்டிய : மைக்கல் கிளார்க்

இருந்தாலும் அவரின் மீது நம்பிக்கை வைத்த இந்திய நிர்வாகம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 8 சுற்றுப்போட்டியின் போதும் துவக்க வீரராக வாய்ப்பு அளித்தது. அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் 50 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அவரது இந்த இன்னிங்ஸ் வாழ்நாளில் மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் என்று பலரும் அவரது இந்த ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் என்ன மனநிலையில் இருந்தார்? என்பது குறித்தும், அவர் மீது தான் என்ன கருத்து வைத்திருந்தேன்? என்பது குறித்தும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கல் கிளார்க் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

இந்த டி20 உலக கோப்பை தொடர் முழுவதுமே சஞ்சு சாம்சன் என்னுடைய ரேடாரின் கீழ் போய்விட்டார். முதலில் அவரை அணியில் சேர்க்கக்கூடாது என்று சிலர் பேசி வந்தனர். பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஒரு சில வாய்ப்புகளில் அவர் சொதப்பியதால் தொடர்ந்து விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் வெளியில் அமர்ந்திருந்த அவருக்கு இனி வாய்ப்பே கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூப்பர் 8 சுற்றில் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமே சஞ்சு சாம்சன் விடயத்தில் இந்திய அணி இந்த தவறை செய்யக்கூடாது – லட்சுமிபதி பாலாஜி வேண்டுகோள்

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் அழுத்தமான நேரங்களில் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை இரண்டு கைகளாலும் பற்றி கொண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் மீண்டும் ரன் குவிக்க துவங்கியுள்ளதால் நிச்சயம் இந்திய அணிக்கு பலம் அதிகரித்துள்ளது என்று நினைக்கிறேன் என்று மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -