- Advertisement -
ஐ.பி.எல்

ஹார்டிக் பாண்டியா செய்ஞ்ச அந்த தவறால் தான் தோற்றோம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தாலும் அதன்பின்னர் மிகச் சிறப்பாக விளையாடி தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது. அந்த வகையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட மும்பை அணி அந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஹார்டிக் பாண்டியாவை விமர்சிக்கும் ரசிகர்கள் :

ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு செல்லும் என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால் நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் மும்பை அணி இப்படி தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள வேளையில் அந்த அணியின் ரசிகர்கள் பலரும் இந்த தோல்விக்கு கேப்டன் ஹார்டிக் பாண்டியா தான் முதன்மை காரணம் என்று விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் நேற்றைய போட்டியின் போது மழை பெய்து ஆட்டம் 2 மணி நேரத்திற்கு பின்னர் துவங்கியதால் மைதானத்தில் டென்னிஸ் பால் பவுன்ஸ் இருந்தது.

அதனால் ஸ்லோவர் பந்துகளுக்கு சற்று சாதகம் கூடுதலாக இருந்தது. அந்த வகையிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பலரும் ஸ்லோ பாலை பயன்படுத்தினர். அதே வேளையில் இரண்டாம் பாதியில் போது மும்பை அணியின் பந்துவீச்சாளர்களும் ஸ்லோ பந்துகளை பயன்படுத்தினர். குறிப்பாக பும்ரா, அஸ்வினி குமார் ஆகியோர் சிறப்பாக பந்து வீசியிருந்தனர்.

- Advertisement -

ஆனால் பாண்டியா தான் பந்து வீச்சாளர்களை ரொட்டேஷன் செய்வதில் தவறு செய்து விட்டார். ஏனெனில் நேற்றைய போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் ரன்களை வாரி வழங்கிய ரீஸ் டாப்லிக்கு அவர் தொடர்ச்சியாக ஓவரை வழங்கினார். ஆனால் தன்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்று தெரிந்தும் ஹர்திக் பாண்டியா இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார்.

இதையும் படிங்க : “ப்ளீஸ் என் கண் முன்னாடி நீ வராத” மும்பையை வீழ்த்திய பிறகு ஷஷாங்க் சிங்கை விரட்டிய – ஷ்ரேயாஸ் ஐயர்

ஒருவேளை டாப்லிக்கு ஓவரை கொடுக்காமல் பாண்டியாவே இன்னும் இரண்டு ஓவர்களை வீசியிருந்தால் நிச்சயம் போட்டியில் கூடுதல் அழுத்தம் இருந்திருக்கும். அதனை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் பலரும் ஹார்டிக் பாண்டியாவிற்கு இரண்டு ஓவர்கள் இருந்தும் அவர் ஏன் பந்து வீசவில்லை என விமர்சித்து தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -