MI vs RR : ஹாட்ரிக் சிக்ஸர்கள், 1000வது போட்டியில் வான்கடேவில் வரலாறு படைத்த மும்பை – ரோஹித்துக்கு பிறந்தநாள் பரிசு

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 42வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு யசஸ்வி ஜெயிஸ்வாலுடன் இணைந்து 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட ஜோஸ் பட்லர் 18 (9) ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (10) ரன்களில் அவுட்டான நிலையில் தேவ்தூத் படிக்கலும் 2 (4) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்த நிலையில் அவருக்கு கை கொடுக்க வேண்டிய சிம்ரோன் ஹெட்மயர் 8 (9) ஜேசன் ஹோல்டர் 11 (9) துருவ் ஜூரேல் 2 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் மும்பையின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆனாலும் தனி ஒருவனாக சொல்லி அடித்த ஜெய்ஸ்வால் சதமடித்து 16 பவுண்டரி 8 சிக்சருடன் 124 (62) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். குறிப்பாக எஞ்சிய பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 63 ரன்கள் எடுத்த நிலையில் அவர் மட்டும் தனி ஒருவனாக 124 ரன்கள் விளாசி ராஜஸ்தான் 20 ஓவரில் 212/7 ரன்கள் எடுக்க உதவினார். மும்பை சார்பில் அதிகபட்சமாக அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 213 ரன்களை துரத்திய மும்பைக்கு தன்னுடைய பிறந்தநாளில் விளையாடிய ரோகித் சர்மா 3 (5) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தையும் பின்னடைவையும் கொடுத்தார்.

அடுத்து வந்த கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட இஷான் கிசான் 2வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போதிலும் 4 பவுண்டரியுடன் 28 (23) ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டானார். அடுத்து சில ஓவரிலேயே அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி 2 சிக்சருடன் அச்சுறுத்தலை கொடுத்த கேமரூன் கிரீனை 44 (26) ரன்களில் மீண்டும் அஸ்வின் காலி செய்தார். அந்த நிலைமையில் ஏற்கனவே களமிறங்கியிருந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் இம்முறை தடுமாறாமல் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடிய விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

அவருக்கு இளம் வீரர் திலக் வர்மா 4வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கை கொடுத்ததால் கடைசி 5 ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் அரை சதமடித்த சூரியகுமார் யாதவ் 55 (29) ரன்களில் சந்தீப் சர்மாவின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டானார். ஆனாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அடுத்து வந்த டிம் டேவிட் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

அதனால் ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது போதிய நேரத்திற்குள் ராஜஸ்தான் 20 ஓவர்களை வீசி முடிக்காததால் ஒரு ஃபீல்டர் உள்வட்டத்திற்கு வெளியே குறைக்கப்பட்டார். அதைப் பயன்படுத்திய டிம் டேவிட் முதல் 3 பந்துகளிலேயே ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டு மொத்தம் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 45* (14) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அவருடன் திலக் வர்மா 29* (21) ரன்கள் எடுத்ததால் 19.3 ஓவரிலேயே 214/4 ரன்கள் எடுத்த மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் பந்து வீச்சில் கடைசி 10 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு ரன்களை வாரி வழங்கிய ராஜஸ்தானுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் (6.25) தவிர்த்து ஏனைய பவுலர்கள் அனைவரும் 9க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.

இதையும் படிங்க:MI vs RR : ஹாட்ரிக் சிக்ஸர்கள், 1000வது போட்டியில் வான்கடேவில் வரலாறு படைத்த மும்பை – ரோஹித்துக்கு பிறந்தநாள் பரிசு

அதை பயன்படுத்தி சூரியகுமார் யாதவ், டிம் டேவிட் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டு இந்த 1000வது ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு சிறப்பான வெற்றியை பெற்றுக் கொடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் பிறந்தநாள் பரிசளித்தனர். அத்துடன் வரலாற்றில் 2வது முறையாகவும் வான்கடே மைதானத்தில் முதல் முறையாகவும் 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து மும்பை வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

Advertisement