12 வீரர்களுடன் விளையாடி 10 விக்கெட் இழந்த பங்களாதேஷ் என்ன புரியலையா – படிங்க புரியும்

Ban-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Rahane

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 12 வீரர்கள் விளையாடியது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ? நம்ப முடியவில்லை என்றாலும் உண்மைதான் பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பராக லிட்டன் தாஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஷமியின் பந்துவீச்சில் ஹெல்மெட்டில் பலமாக தாக்கப்பட்டார்.

Ban

பின்னர் அதன் பிறகு சிறிது நேரம் தொடர்ந்து ஆடிய லிட்டன் தாஸ் அதன்பிறகு தனது ஆட்டத்தை தொடர இயலவில்லை எனவும் தனக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அம்பயரிடம் தெரிவித்தார் எனவே அம்பயர் அவரை ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் அவரை வெளியேற்றி அவருக்கு பதிலாக மெஹ்தி ஹஸன் என்ற பங்களாதேஷ் வீரரை பேட்டிங் செய்ய அனுமதித்தனர்.

ban 2

அதன்படி விளையாடிய ஹசன் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது எப்படி சாத்தியம் எனில் ஐசிசி சமீபத்தில் கொண்டு வந்த சப்ஸ்டியூட் வீரர் என்ற முறையில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட போது மாற்று வீரராக களம் இறங்கும் வீரர் பேட்டிங் பௌலிங் ஆகியவற்றை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை மூலம் நேற்று பங்களாதேஷ் அணியில் 12 பேர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement