- Advertisement -
ஆசிய கோப்பை

இந்தியாவை பற்றி வங்கதேசத்துக்கு கவலையில்ல.. இதை செஞ்சு சாதாரணமாக தோற்கடிப்போம்.. மெஹதி ஹசன்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த சுற்றில் இந்தியா தங்களது முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 2வது முறையாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் 7 வெற்றிகளைப் பெற்று அசத்தியது.

இதை அடுத்து இந்தியா தங்களுடைய அடுத்த சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா அந்தப் போட்டியிலும் வங்கதேசத்தை தோற்கடித்து வெல்லும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் தங்களது முதல் போட்டியில் இலங்கை அணியை தோற்கடித்து வங்கதேசம் அசத்தியது.

- Advertisement -

இந்தியாவை பார்த்து கவலையில்ல:

இத்தனைக்கும் லீக் சுற்றுடன் வெளியேற காத்திருந்த அந்த அணி ஆப்கானிஸ்தானை கடைசிப் போட்டியில் இலங்கை தோற்கடித்ததால் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. அங்கே இலங்கையை தோற்கடித்த கொண்டாட்டத்தில் வங்கதேச ரசிகர்கள் பாம்பு நடனமாடியது வைரலானது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட எதிரணி யாராக இருந்தாலும் தங்களுக்கு கவலையில்லை என்று வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையை தோற்கடித்ததால் தன்னம்பிக்கையுடன் இருக்கும் தாங்கள் எப்போதும் போல விளையாடி இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஹசன் பேசியது பின்வருமாறு. “இலங்கைக்கு எதிரான வெற்றிக்குப் பின் நாங்கள் பெரிதாக எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை. ஆரம்பம் முதலே நாங்கள் சாதாரணமாக இருக்கிறோம்”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

“நாங்கள் இருக்கும் விதமும் எங்களுடைய பாடி லாங்குவேஜ் காணப்படும் விதமும் சாதாரணமாகவே இருக்கிறது. நாங்கள் எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்கவில்லை. அடுத்த முறையும் நாங்கள் மற்றொரு கிரிக்கெட் போட்டியை விளையாடப் போகிறோம் என்ற நிலையில் செல்வோம். அங்கே எதிரணி இந்தியா அல்லது ஆஸ்திரேலியா உட்பட யாராக இருந்தாலும் அது எங்களுக்கு கவலையில்லை”

இதையும் படிங்க: அமைதியான இந்தியாவை சீண்டுனா பாகிஸ்தானை வெளுப்போம்.. நீங்க பேசுனா அவங்க ஜெய்ப்பாங்க.. பதான் பதிலடி

“போட்டியின் சூழ்நிலையை வைத்து நாங்கள் அனைத்தையும் முடிவு செய்வோம். போட்டி சூழ்நிலையை அடிப்படையாக வைத்தே எங்களின் அனைத்து திட்டங்களும் வரும். அதே போல வெளிப்புறங்களில் காணப்படும் சத்தத்தைப் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை. விமர்சனங்கள் அல்லது பேச்சுக்கள் ஆகியவை ஊடகங்கள் அல்லது ரசிகர்களால் உருவாக்கப்படுபவை. நாங்கள் ஒவ்வொரு சர்வதேச போட்டியையும் விளையாடுவதைப் போலவே இந்தியாவுக்கு எதிரானப் போட்டியிலும் சாதாரணமாக விளையாடுவோம்” என்று கூறினார்.

- Advertisement -