2003 உலககோப்பையில் சச்சினை அவுட்டாக்கிய பிறகு இன்னும் எனக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை – மனம் திறந்த ஆஸி வீரர்

Sachin-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால் எப்போதும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும். அதனைப் போன்றே 2000 மாவது ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற 2003ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்த உலகக்கோப்பை தொடரின் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதி போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.

sachin

- Advertisement -

அந்த தொடரில் இந்திய அணி கங்குலி தலைமையில் சிறப்பாக விளையாடி வந்து இறுதிப்போட்டியில் ரிக்கி பாண்டிங் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது.

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அந்த கோப்பையை கைப்பற்றியது. அந்த போட்டியில் சச்சின் மற்றும் மெக்ராத் ஆகியோருக்கு இடையேயான மோதல் கண்டிப்பாக அந்த போட்டியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். மெக்ராத் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த சச்சின் ஆட்டம் இருந்து வெளியேறியபோது அதனை வெறுக்காதா இந்திய ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அந்த விக்கெட் மிகப்பெரும் விக்கெட்டாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

mcgrath

இந்நிலையில் அந்த நிகழ்வு குறித்து கூறியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறுகையில் : எனக்கும் சச்சினுக்கும் இடையில் சிறப்பான கிரிக்கெட் சண்டை நடைபெற்று உள்ளது. தற்போது நான் இந்தியாவின் அதிக நேரத்தை செலவழித்து வருகிறேன். இந்தியா எனக்கு இரண்டாவது சொந்த வீடு மாதிரி இங்கே எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இருந்தாலும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சச்சினை அவுட்டாகியதற்காக இதற்காக இங்கு உள்ளவர்கள் என்னை மன்னிக்கவில்லை என்று மெக்ராத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement