டெஸ்ட் கிரிக்கெட்ல பெருசா சாதிக்கலனாலும் இவர் வேற லெவல் பிளேயர் – இந்திய வீரரை புகழ்ந்த மெக்ராத்

mcgrath
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மெக்ராத் இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித்துக்கும் இடையே ரன் குவிப்பதில் கடும் போட்டி நிலவும். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கோலியை விட ஸ்மித் ஒரு படி மேலேதான் இருக்கிறார். அவர் எந்தெந்த இடத்தில் அடிக்க வேண்டுமோ அந்த இடத்தில் அடித்து ரன்களை குவித்து விடுவார்.

Smith

அதனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தின் ஆட்டத்தை பார்க்க நான் ஆவலாக உள்ளேன். அதனைப் போன்றே இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா பெரிய அளவில் இதுவரை சாதிக்கவில்லை என்றாலும் அவர் ஒரு தரமான வீரர். இந்த தொடரில் அனைவரும் எதிர்பார்க்காத வேளையில் தனது சிறப்பான ஆட்டத்தை நிச்சயம் ரோகித் சர்மா வெளிப்படுத்துவார்.

Rohith

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருக்கும் ரோஹித் நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தினால் அசத்துவார் என்று தான் கருதுவதாக மெக்ராத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement