விராட் கோலியின் இடத்தை இவரால் தான் நிரப்ப முடியும். அதற்கு சரியான ஆள் இவர்தான் – மெக்ராத் கணிப்பு

Mcgrath
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் 1-0 கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் நாடு திரும்புவதால் அவரை இடத்திலிருந்து பேட்டிங் செய்ய போவது யார் என்ற கேள்வி பெரிதளவில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வந்தது.

Ind

இந்நிலையில் இது குறித்து தற்போது பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிளன் மெக்ராத் கூறுகையில் : விராட் கோலியின் இடத்தை நிரப்புவது என்பது கடினமான ஒன்று ஏனெனில் இந்திய அணியின் முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் இந்த தொடரில் இருந்து விலகியது நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும், அதே வேளையில் அவரது இடத்தை நிரப்பும் அளவிற்கு இந்திய அணியில் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர்.

- Advertisement -

மேலும் அவர்களது திறமையை நிரூபிக்க இது போன்ற ஒரு வாய்ப்பு சரியாக அமையும் என நம்புகிறேன். என்னை பொறுத்தவரை இந்திய அணியில் தற்போது கோலியின் இடத்தை நிரப்ப கூடிய ஒருவராக கே.எல் ராகுல் இருக்கிறார் என கருதுகிறேன். அதே போன்று கில் சிறந்த வீரர் ஒருநாள் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினார். எனவே டெஸ்ட் போட்டிகளிலும் அவரை ஓப்பனாக களமிறக்க வேண்டும் என்றுகூறினார்.

Rahul

மேலும் அவரது சிறப்பான ஆட்டம் இதன் மூலம் வெளிப்படும் வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களைச் சேர்த்து 4 ரன்களை மட்டுமே அடித்துள்ள பிரித்திவி ஷாவிதான் மோசமான பேட்டிங் விமர்சனத்துக்கு உள்ளாகி நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பலரும் தங்களது காட்டமான கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

kohli

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக 74 ரன்களை குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement