இந்திய அணியின் கில்க்ரிஸ்ட் இவர்தான். இந்திய வீரரை புகழ்ந்த – மெக்ராத்

Mcgrath
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

Gill

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்து முதல் இன்னிங்ஸில் 195 ரன்களை குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை பெற்று 131 ரன்கள் முன்னிலை வகித்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 200 ரன்களை பெற்று 10 விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 70 எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய பந்துவீச்சு ஜாம்பவான் க்ளென் மெக்ராத்தின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இது குறித்து பேசிய மெக்ராத் :

Pant-2

“ ரிஷப் பண்ட் தனது கீப்பிங் திறமையால் ஆஸ்திரேலிய கீப்பர் கில்கிறிஸ்டை நினைவுபடுத்துகிறார். பண்ட் கீப்பிங் மூலம் பல பாராட்டுகளைப் பெற்றாலும் தனது பேட்டிங்கில் அனைவரையும் ஈர்க்க தவறிவிட்டார். அவர் தனது விக்கெட்டை மதிக்காமல் தேவையற்ற ஷாட்களை விளையாடி வருகிறார். இதனால் ரிஷாப் பண்டால் மூன்று வடிவில் வடிவங்களில் இந்தியாவின் வரிசையில் தனது இடத்தை உறுதி செய்ய முடியவில்லை.

pant 1

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6வதாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 40 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை குவித்தார். சிறந்த தொடக்கத்தை கொடுத்த பண்ட் மிகப் பெரிய ஸ்கோராக மாற்ற தவறவிட்டார்” என்று சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிடம் க்ளென் மெக்ராத் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement