ஒரு இரவில் நீங்கள் இப்படி நினைப்பது தவறு. இந்தியா திருப்பி அடிக்கும் – மெக்ராத் நம்பிக்கை

Mcgrath
- Advertisement -

வெலிங்டனில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் இந்திய அணி சொதப்பினார்கள். அதே வகையில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் அவர்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Southee 2

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சு பெரிய அளவில் இம்முறை நியூசிலாந்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் இஷாந்த் தவிர மற்ற யாரும் இந்த போட்டியில் சோபிக்கவில்லை. இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா காயத்திற்குப் பிறகு அவரின் வேகம் குறைந்துள்ளது. மேலும் அஸ்வினின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு குறித்து பேசிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது : இந்திய பந்துவீச்சாளர்கள் மீது இன்னும் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நியூசிலாந்து தொடருக்கு முன்னர் சில வீரர்கள் காயமடைந்தனர். இஷாந்த் காயத்திலிருந்து திரும்பியுள்ளார் அவரின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது.

Ishanth

பும்ராவும் மீண்டு வந்துள்ளார் ஆனால் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இந்தியாவின் பந்துவீச்சு யூனிட் உலகத்தரம் வாய்ந்தது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. பந்துவீச்சில் எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஆனால் இந்த ஒரு தோல்வியை வைத்து ஒரு இரவில் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க வேண்டாம். நியூசிலாந்து போன்ற நாடுகளில் டாஸ் வெல்வது என்பது மிக மிக முக்கியமானது என்றாலும் ரன் குவிக்க வேண்டியது அவசியம் என்று மெக்ராத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement