குழந்தை பிறந்த பின்பு எலும்பும் தோலுமாக மாறிய மாயந்தி லாங்கர் – வைரலாகும் புகைப்படம்

Mayanti-langer

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை போட்டிகளுக்கு இடையே பல வர்ணனையாளர்கள் போட்டிகள் குறித்த முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குவது வழக்கம். அந்த வகையில் ரசிகர்களின் வரவேற்பு அதிகம் மிகுந்த ஒரு பெண் வர்ணனையாளராக இருப்பவர்தான் மாயந்தி லாங்கர். இந்திய அணியின் வீரரான ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியான இவர் பல வருடங்களாக கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்குகிறார்.

mayanti 1

அதுமட்டுமின்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளராகவும் இவர் பணிபுரிந்து வருகிறார். பல ஐபிஎல் தொடர்களில் பணியாற்றியுள்ள இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்குவது மட்டுமின்றி போட்டிக்கு இடையே மைதானத்தில் எடுக்கும் இவரது பேட்டியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

- Advertisement -

கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர் அதன் பிறகு பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார். குழந்தை பிறக்கும் முன் வரை சற்று உடல் பூசி பப்ளி ஆக இருந்த மாயந்தி லாங்கர் தற்போது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

mayanti

அதன்பின்னர் தற்போது குழந்தை பிறந்து 9 மாதங்கள் கழித்து தனது மகனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு சற்று உடல் எடை குறைந்து ஒல்லியாக உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படும் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் எப்படி இவர் தற்போது இப்படி ஆகிவிட்டாரே என்று ஷாக் ஆகியுள்ளனர்.

- Advertisement -

மேலும் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் மற்றும் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பணியாற்றும் வாய்ப்பை தவறவிட்ட அவர் விரைவில் போட்டிகளை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement